மார்ச்சுக்குள் 50% இலக்கு: கரோனா தடுப்பு மருந்து செலுத்துவதைத் தீவிரப்படுத்தும் அமீரகம்

By செய்திப்பிரிவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் 48% மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை தரப்பில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் டிசம்பர் மாதம் முதல் கரோனா தடுப்பு மருந்து போடப்பட்டு வருகிறது. இதுவரையில் மக்கள்தொகையில் 48% கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துக்குள்ளாக 50% மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்துவதுதான் இலக்கு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருவதால், இரண்டு வாரங்களாக கரோனா தொற்று குறைந்து வருகிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 11 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

சினோபார்ம், ஜான்சன் & ஜான்சன், ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்