ஜம்மு காஷ்மீரில் நிலைமையை உற்று கவனித்து வருகிறோம்: அமெரிக்கா

By செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீரில் நிலைமையைத் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரஸ் கூறும்போது, “நாங்கள் தொடர்ந்து காஷ்மீரில் நிலைமையை உற்று கவனித்து வருகிறோம். இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் தொடர்பாக எங்களது கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.

எல்லையில் நிலவும் பதற்றத்தை இரு நாடுகளும் தணிக்க வேண்டும். 2003ஆம் ஆண்டு செய்துகொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டும். கட்டுப்பாடுகளை மீறி இரு நாட்டு எல்லையில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை நாங்கள் கண்டிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் தீவிரவாதத் தாக்குதலால் கொல்லப்பட்டபின் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவில் பெரிய அளவுக்கு விரிசல் ஏற்பட்டது. அதன்பின் இந்தியா தரப்பிலும் பதிலடி தரப்பட்டு, பாலக்கோட்டில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படையினர் தாக்குதல் நடத்தினார்கள்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் வலுத்து வந்ததது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்