சிவகங்கை மாவட்டம் சிவகங்கை, காரைக்குடி பகுதிகளில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் உரிய ஆவனமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை காளவாசல் சோதனைச் சாவடி அருகே நேற்று இரவு வட்டாட்சியர் மைலாவதி தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மதுரையில் இருந்து சிவகங்கை வந்த காரை அவர்கள் சோதனையிட்டபோது ரூ.6.5 லட்சம் இருந்தது. மேலும் விசாரணையில் காரில் வந்தவர்கள் சென்னையைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் என்பதும் அவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருவதும் தெரியவந்தது.
மேலும் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால், ரூ.6.5 லட்சத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
» சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு: தூத்துக்குடி மாவட்ட வெடிமருந்து கிடங்குகளில் எஸ்.பி திடீர் ஆய்வு
அதேபோல் காரைக்குடி அருகே மாத்தூர் பகுதியில் வட்டாட்சியர் சேதுநம்பு தலைமையிலான பறக்கும்படையினர் இன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவகோட்டையில் இருந்து புதுவயலுக்கு வந்த காரை அவர்கள் சோதனையிட்டனர்.
அதில் ரூ.10.50 லட்சம் இருந்தது. மேலும் காரில் இருந்தவர்கள் அரிசியை தேவகோட்டை பகுதியில் விற்றுவிட்டு பணம் வாங்கி வந்ததாக கூறியுள்ளனர். ஆனால் உரிய ஆவணமில்லாததால், பணத்தை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago