சினோபார்ம் கரோனா தடுப்பு மருந்துகளை இராக்குக்கு சீனா அன்பளிப்பாக அனுப்பி வைத்துள்ளது.
இதுகுறித்து இராக் சுகாதாரத் துறை தரப்பில், “சீனாவின் சினோபார்ம் கரோனா தடுப்பு மருந்துகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. பாக்தாத்தில் உள்ள மூன்று முக்கிய மருத்துவமனைகளுக்கு கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைத்துள்ளோம். பாக்தாத் மட்டுமல்லாமல் பல்வேறு மாகாணங்களுக்கும் கரோனா தடுப்பு மருந்து அனுப்பப்பட உள்ளது. இன்று முதல் நாங்கள் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்த உள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராக்கில் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்
முன்னதாக, சினோபார்ம், ஜான்சன் & ஜான்சன், ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago