மதுரையில் தேர்தல் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி: முதியவர்கள், நோயாளிகளுக்கும் போடப்பட்டது

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்பட 61 மையங்களில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்றும் பணியாளர்கள் உள்பட நோயாளிகள், முதியவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

தமிழகத்தில் கடந்த மாதம் 16ம் தேதி முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் போன்ற முன்களப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது.

இதில், நேற்று வரை 23,285 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இன்று இரண்டாம் கட்டமாக, மதுரை மாவட்டத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை, அனைத்து அரசு வட்டார சுகாதாரநிலையங்கள் உள்பட 61 மையங்களில் 60 வயதிற்கு மேற்பட்டோர், முதியவர்கள் மற்றும் 45 வயது முதல் 59 வயதிற்குட்பட்ட நோயாளிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி சுகாதாரத்துறை சார்பில் தொடங்கியது.

இதில், சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்ற உள்ள அணைத்து பணியாளர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது. முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமில்லாது நேரடியாக இந்த மையங்களுக்கு சென்றவர்களுக்கும் இன்று பரிசோதனை செய்து சுகாதாரப்பணியாளர்கள் தடுப்பூசி போட்டனர்.

தடுப்பூசி போட வந்தவர்களிடம் ஆதார், ஒட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஓர் அடையாள அட்டைகளை பெற்றுக் கொண்டு சுகாதரத்துறையினர் தடுப்பூசி போட்டனர்.

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீட்டு திட்டம் செயல்படும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 செலுத்தி தடுப்பூசி போட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்