மதுரையில் சாலையில் அடிப்பட்டு உயிருக்குப்போராடிய தெருநாய்க்கு ஆம்புலன்ஸ் வரவைழைத்து சிகிச்சை வழங்கப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை தெரு நாய் ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அப்பகுதியாக சென்றவர்கள் பார்த்து அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்.
கால்நடை மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்சில் சென்று அடிப்பட்டுக் கிடந்த தெருநாயை மீட்டு தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனைக்கு விலங்குகள் நல ஆர்வலர்களான மும்தாஜ் மற்றம் மயூர் ஆகியோர் உதவியுடன் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அந்த தெரு நாய்க்கு எக்ஸ்ரே எடுத்து பாதிப்பின் தன்மை அறிந்து உடனடி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனால், தற்போது அந்த தெருநாய் நலமுடன் உள்ளது.
தெருநாய் அடிப்பட்டுக் கிடந்ததை அலட்சியமாகக் கருதாமல் உடனடியாக ஆம்புலுன்ஸில் சென்று சிகிச்சை அழித்து பன்முக மருத்துவமனையின் பிரதம மருத்துவர் வைரவ சாமி தலைமையிலான கால்நடை உதவி மருந்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களை கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜதிலகன் பாராட்டினார்.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago