திருச்சியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்ததை, இப்போதைய தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், கோரிக்கைகளை ஏற்று அரசாணை வெளியிடும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.
"அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப் படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியருக்கு ரூ.10 லட்சம், உதவியாளருக்கு ரூ.5 லட்சம் வீதம் பணிக் கொடை வழங்க வேண்டும்" ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் இன்று (பிப். 22) காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறும்போது, "எங்களை அரசு ஊழியர்களாக்குவதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அவர் மறைந்து 4 ஆண்டுகளாகியும், அந்தக் கோரிக்கையை அவரது வழியில் செயல்படுவதாகக் கூறும் இப்போதைய தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை. இது தொடர்பாக, பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் தீர்வு கிடைக்காததால் இன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
அரசு, எங்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளை அழைத்துப் பேசி, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக, இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும். அதுவரை இங்கேயே தங்கி, சமைத்துச் சாப்பிட்டு, இரவு - பகலாகத் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர்.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago