சிரியாவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

By செய்திப்பிரிவு

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 9 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து பிரிட்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் போர் கண்காணிப்பு குழு கூறும்போது, “ சிரிய தலைநகர் டமாஸ்கஸ் அருகே இஸ்ரேல் ராணுவ படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 9 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர் அவர்களது ஆயுதங்களும் அழிக்கப்பட்டன” என்று தெரிவித்துள்ளார்.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது.

ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிரியாவில் சமீப நாட்களாக இஸ்ரேல் மற்றும் துருக்கி படையினர் தங்களது தாக்குதலை அதிகரித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்