டெக்சாஸில் பனி பாதிப்பு: 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சாரமின்றி தவிப்பு

By செய்திப்பிரிவு

டெக்சாஸில் பனி பாதிப்பு காரணமாக 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ அமெரிக்க மாகாணமான டெக்சாஸில் உறை பனி நிலவுகிறது. இதனால் அங்கு பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சார இழப்பை சந்தித்துள்ளனர். மின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வடக்குப் பகுதிகளிலும் மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெக்சாஸ் கவர்னர் அப்பாட் கூறும்போது, ”மோசமான மின்சார இழப்பை சந்தித்துள்ளோம். மின்சாரத்தை உற்பத்தி செய்ய பல நிறுவனங்களால் முடியவில்லை. நிலக்கரி, இயற்கை வாயு, காற்றாலை மூலமும் மின் உற்பத்தி செய்ய முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்