ஹவுத்தி அமைப்பினர் தீவிரவாதிகளாகவே பார்க்கப்படுவர்: சவுதி திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

ஹவுத்தியினர் தொடர்ந்து தீவிரவாத அமைப்பாகவே பார்க்கப்படுவார்கள் என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

ஏமன் போரில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போர் புரியும் சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா பல ஆண்டுகளாக ஆதரவு அளித்து வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் சவுதிக்கு அளித்து வந்த ஆதரவை அமெரிக்கா வாபஸ் பெற்றது. இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக சவுதி தனது தரப்பு கருத்தை தெரிவித்துள்ளது.

அதில், “ ஹவுத்தி அமைப்பினர் தொடர்ந்து எங்கள் பாதையில் தீவிரவாத அமைப்பாகவே பார்க்கப்படுவர்” என்று தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவின் முடிவையும் சவுதி விமர்சித்துள்ளது.

ஏமன் போர்

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்