கீழடி 7-ம் கட்ட அகழாய்வு: கானொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைப்பு

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணியை கானொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்டநிலையில் 4-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஐந்தாம் கட்ட அகழாய்வில் 750-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. ஆறாம் கட்ட அகழாய்வுப் பணி கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடந்தன. இதில் 3,500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சமீபத்தில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து இன்று சென்னையில் இருந்தபடியே கானொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த அகழாய்வு தமிழக தொல்லியல்துறை மூலம் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடக்கின்றன.

கீழடியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம், கோட்டாட்சியர் முத்துகலுவன், ஊராட்சித் தலைவர்கள் வெங்கடசுப்ரமணியன், தீபலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி கூறுகையில், ‘‘7-ம் கட்ட அகழாய்வு 6 மாதங்கள் நடக்கும். 2 ஏக்கரில் ரூ.12.21 கோடியில் சர்வதேச தரத்தில் கீழடி அகழ் வைப்பகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் திறக்கப்படும். இதில் இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் வைக்கப்படும்,’’ என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்