பிப்.,19-ல் சென்னை கோட்டையை முற்றுயிடும் போராட்டம்: அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அறிவிப்பு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

‘‘வரும் 19-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் சென்னையை நோக்கி சென்று கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம், ’’ என்று அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் செல்வம் மதுரையில் தெரிவித்தார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 3 1/2 லட்சம் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், நான்கரை லட்சம் அரசுப் பணியிடங்கள் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆதிஷேசய்யா குழு அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்,

அரசு ஊழியர்களின் 21 மாத நிலுவைத்தொதை வழங்க வேண்டும், கருவூலத்துறையை அரசே ஏற்று நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்த உள்ளோம்.

அரசு ஊழியர்களை முதல்வர் அழைத்துப்பேச மறுக்கிறார். ஜனநாயக வழியில் போராடும் எங்கள் மீது காவல்துறை கடுமையாக நடந்து கொள்கின்றனர். அதனால், வரும் 19 ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் சென்னையை நோக்கி சென்று கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்து உள்ளோம்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் மீது கடுமையாக நடந்து கொண்டது காவல்துறை ஜனநாயக மரபை மீறிய செயலாகும். மிகச்சிறந்த பணியை செய்வதாக கூறும் முதல்வர் எங்களை அழைத்துப்பேச மறுப்பது நியாயமற்றது. எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்