முதல்வர் எடப்பாடி பழனிசாமி - சசிகலா சந்திப்பு எந்த ஜென்மத்திலும் நடக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோட்டூர்புரத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மினி கிளினிக்கை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கல்வி, செல்வம், வீரத்துக்குப் பிறகு முக்கியத்துவம் பெற்றுள்ளது உடல் நலம். அதைக் கருத்தில் கொண்டு மருத்துவமனைகளின் எண்ணிக்கை உயர்த்தப்படுகின்றது.
கடந்த மக்களவைத் தேர்தலில் இருந்த பாமக, தேமுதிக, பாஜக, தமாகா கட்சிகளுடனான எங்களின் கூட்டணி இந்தத் தேர்தலிலும் தொடர்கிறது. சசிகலா, டிடிவி தினகரனுக்குப் பொது எதிரி அதிமுக. அவர்கள் இருவரும் ஒன்றிணைவோம் வாருங்கள் என்று திமுகவைத்தான் அழைக்கின்றனர். வேறு யாரையும் கூப்பிடவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி - சசிகலா சந்திப்பு எந்த ஜென்மத்திலும் நடக்காது'' என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
» மாரச் 14 -ம் தேதிவரை ஊரடங்கை நீட்டிக்கும் ஜெர்மனி
» கரோனா பலி எண்ணிக்கை: நியூயார்க்கைப் பின்னுக்குத் தள்ளிய கலிபோர்னியா
தேமுதிக பொருளாளர் பிரேமலாதா சசிகலாவைச் சந்திப்பது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ''யார் யாரை வேண்டுமானாலும் நட்பு அடிப்படையில் சந்திக்கலாம்'' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago