மாரச் 14 -ம் தேதிவரை ஊரடங்கை நீட்டிக்கும் ஜெர்மனி

By செய்திப்பிரிவு

ஜெர்மனியில் கரோனா வைரஸை கடுப்படுத்தும் நோக்கில் மார்ச் மாதம் 14 -ம் தேதிவரை ஊரடங்கை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறும்போது, “ ஜெர்மனியில் கரோனா வைரஸ் குறைந்துள்ளது. எனினும் புதியவகை கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு மார்ச் 14 -ம் தேதிவரை ஊரடங்கை நீட்டிக்க அரசு விரும்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மாகாண ஆளுநர்களுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 10 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்