கரோனா பலி எண்ணிக்கை: நியூயார்க்கைப் பின்னுக்குத் தள்ளிய கலிபோர்னியா

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “அமெரிக்காவில் கரோனாவினால் அதிகம் பலியானவர்களைக் கொண்ட மாகாணமாக நியூயார்க் இருந்து வந்தது. இந்த நிலையில் நியூயார்க்கைப் பின்னுக்குத் தள்ளி கலிபோர்னியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்காவில் மக்கள்தொகை அதிகம் கொண்ட மாகாணமான கலிபோர்னியாவில் கரோனாவுக்கு இதுவரை 45,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலிபோர்னியா மாகாண ஆளுநர் மார்க் காலி கூறும்போது, “இந்த உயிரிழப்பு கரோனா வைரஸ் ஆபத்தானது என்பதைக் காட்டுகிறது. கரோனா வைரஸால் தங்களது குடும்பத்தினரை இழந்த கலிபோர்னியா வாசிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராகத் தான் பதவி ஏற்ற பிறகு 100 நாட்களில் 10 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று ஜோ பைடன் உறுதி ஏற்றது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் 10 கோடி பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 21 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 7 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கரோனாவினால் அதிகம் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்க்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 2.7 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்