ஓஎம்ஆர் சீட் அடிப்படையில் நீட் தேர்வில் மதிப்பெண் கோரிய மனு தள்ளுபடி

By கி.மகாராஜன்

நீட் தேர்வில் ஓஎம்ஆர் சீட் அடிப்படையில் மதிப்பெண் வழங்கக்கோரி மாணவி ஒருவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த பெர்லின், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

நீட் தேர்வில் 2019-ல் வெற்றி பெறவில்லை. 2020- 2021 நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை. இதனால் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், ஓஎம்ஆர் சீட் நகல் கேட்டு விண்ணப்பித்தேன்.

அப்போது எனக்கு தரப்பட்ட ஓஎம்ஆர் சீட் நகலை ஒப்பிடுகையில், அது நான் எழுதிய நீட் தேர்வுடன் சம்பந்தப்படாமல் இருந்தது.

எனவே நான் எழுதிய தேர்வின் அசல் ஓஎம்ஆர் சீட் மற்றும் அதற்கான விடை சுருக்கத்தின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும். அதுவரை 2020- 2021 ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓர் இடத்தை காலியாக வைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பார்த்திபன் விசாரித்து, மனுதாரரின் கோரிக்கை ஏற்கும்படியாக இல்லை என்றார்.

இதையடுத்து மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்