பிரேசிலில் கரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 2,33,520 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ”பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 1,350 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2,33,520 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நேற்று மட்டும் பிரேசிலில் 51,486 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். பிரேசிலில் இதுவரை கரோனாவுக்கு 95,99, 565 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 நாட்களாக பிரேசில் கரோனா பலி எண்ணிக்கை 1,000-ஐ கடந்து வருகிறது. பிரேசிலில் இதுவரை 88 லட்சத்துக்கு அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
» தமிழகம்-புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையர் சென்னை வந்தார்
» ஆஸ்கர் 2021: ஏமாற்றம் தந்த ஜல்லிக்கட்டு; குறும்பட இறுதிப் பட்டியலில் பிட்டூ
முன்னதாக, பிரேசிலுக்கு சிறப்பு விமானத்தில் 20 லட்சம் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜென்கா நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா கடந்த மாதம் அனுப்பியது.
இந்த நிலையில் சீனாவிடமிருந்து கரோனா தடுப்பு மருந்துகளை வாங்க பிரேசில் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் , சினோபார்ம், ஜான்சன் & ஜான்சன், ஆக்ஸ்போர்டு ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago