கட்டுக்குள் கரோனா; ஊரடங்கு தேவையில்லை: பிரான்ஸ்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றுப் பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளதால் ஊரடங்கு தேவையில்லை என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் கூறுகையில், “பிரான்ஸில் கரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. எனவே, ஊரடங்கு அவசியமில்லை. கடந்த மூன்று வாரங்களாக ஒரு நாளைக்கு 20,000 பேர் என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாளில் சுமார் 3,000 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிப்ரவரி மாதம் முடிவதற்குள் பிரான்ஸில் 40 லட்சம் பேர் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்று இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரான்ஸில் கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்