சாஸ்தாகோயில், கோவிலாறு சுற்றுலா மையங்கள் நாளை முதல் திறப்பு

By இ.மணிகண்டன்

கரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த சாஸ்தாகோயில், கோவிலாறு சுற்றுலா தலங்கள் நாளை (பிப்.6ம் தேதி) முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதியில் உள்ளது சாஸ்தாகோயில் மற்றும் கோவிலாறு சுற்றுலா மையங்கள்.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 3வது வாரம் முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இச்சுற்றுலா தலங்களுக்குச் செல்ல வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க அரசு அனுமதியளித்தது.

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாறு மற்றும் சாஸ்தா கோயில் சுற்றுலா தலங்கள் மீண்டும் நாளை (6ம் தேதி) முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படும் என மாவட்ட வன உயிரின பாதுகாப்பு அலுவலர் முகமதுசபாப் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்