சீனாவிடமிருந்து கூடுதலாக 20 மில்லியன் கரோனா தடுப்பு மருந்துகளை பிரேசில் வாங்க உள்ளது.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில், ''சீனாவின் சினோபார்ம் மருந்து நிறுவனத்திடமிருந்து இன்னும் கூடுதலாக 20 மில்லியன் கரோனா தடுப்பு மருந்துகளை அரசு வாங்க உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரேசிலுக்கு சிறப்பு விமானத்தில் 20 லட்சம் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜென்கா நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா கடந்த மாதம் அனுப்பியது.
இந்த நிலையில் சீனாவிடமிருந்து கரோனா தடுப்பு மருந்துகளை வாங்க பிரேசில் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் , சினோபார்ம், ஜான்சன் & ஜான்சன், ஆக்ஸ்போர்டு ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago