பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 3-வது நாளாக இன்று உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையை லிட்டருக்கு 26 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 29 பைசாவும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பெட்ரோல் விலை கடந்த ஜனவரி 27-ம் தேதிக்குப் பின் பிப்ரவரி 2-ம் தேதி வரை மாற்றப்படாமல் இருந்து வந்தது. அதேபோல டீசல் விலையும் பிப்.2 வரை மாற்றப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ.89.13 பைசாவில் இருந்து, ரூ.89.39 பைசாவாக அதிகரித்துள்ளது. டீசல் விலை ரூ.82.04 பைசாவிலிருந்து ரூ.82.33 பைசாவாக அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago