கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்துவரும் சூழலில், இன்று சவரனுக்கு 336 ரூபாய் குறைந்துள்ளது.
தொழில்துறைத் தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.
பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ததால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன.
இதற்கிடையே 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
» சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு
» மத்திய அரசுப் பணிகளில் நிரப்பப்படாத எஸ்.சி, எஸ்.டி. இடங்கள்: மக்களவையில் மத்திய இணை அமைச்சர் தகவல்
இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.42 குறைந்து ரூ.4,441-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.3,366 குறைந்து ரூ.35,528க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.38,600க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து 1 கிராம் 72 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று, 72 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago