ஐரோப்பாவில் கரோனா தடுப்பு மருந்து செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவுக்கான இயக்குனர் ஹன்ஸ் குல்ஜ் தரப்பில் கூறும்போது, “வைரஸ் தனது உருவத்தை மாற்றிக்கொண்டு வருவதால் நாம் புதிய வகையிலான சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளோம். எனவே, கரோனா தடுப்பு மருந்து செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். தற்போது நமக்கு இது தேவையானது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 10 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன
பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் ஐரோப்பாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனா பரவல் ஒருபக்கம் இருந்தாலும் கரோனா தடுப்பு மருந்து பெரும்பாலான நாடுகளில் போடப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago