வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.735 ஆக உயர்ந்துள்ளது.
அரசு சார்பான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (ஓஎம்சி) வியாழக்கிழமை (பிப்ரவரி 4) மெட்ரோ நகரங்களில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.25 ஆக உயர்த்தியுள்ளன.
புதிய கட்டணங்கள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த விலை அதிகரிப்பு காரணமாக, டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.719 ஆகவும், கொல்கத்தாவில் 745.50 ஆகவும், மும்பையில் ரூ.719 ஆகவும், சென்னையில் ரூ.735 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு தொடங்கியபோது, ஜனவரி மாதத்தில் விலை உயர்வு ஏற்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும், டிசம்பரில் இரண்டு முறை ஏற்பட்ட விலை உயர்வுகள் மூலம் டெல்லியில் ஒரு சிலிண்டருக்கு ரூ.100 உயர்த்தப்பட்டது.
எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCs) எல்பிஜி சிலிண்டர்களின் விலைகளைத் திருத்துகின்றன. இந்த விலையேற்றம் முக்கியமாக எல்பிஜியின் சர்வதேச அளவுகோல் வீதத்தையும், அமெரிக்க டாலர் மற்றும் ரூபாய் மாற்று வீதத்தையும் சார்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago