மத்திய அரசுப் பணிகளில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் நிரப்பப்படாத இடங்கள் குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது. இதை விழுப்புரம் எம்.பி.யான டி.ரவிக்குமார் கேள்விக்கான பதிலில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
ரவிக்குமார் எம்.பி. நாடாளுமன்றத்தில், 1. நடப்பு ஆண்டிலும் கடந்த 3 ஆண்டுகளிலும் மத்திய அரசுப் பணிகளில் எஸ்சி/ எஸ்டி பிரிவினர் எத்தனை பேர் நியமிக்கப்பட்டனர்?
2. மத்திய அரசுப் பணிகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் ( backlog vacancies) எத்தனை? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுகுறித்து மத்திய இணை அமைச்சரான ஜிதேந்திர சிங் அளித்த எழுத்துபூர்வ பதிலில் கூறுகையில், ''மத்திய அரசுப் பணிகளில் சுமார் 90% உள்ள பத்து துறைகளில் எஸ்சி பிரிவினருக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 40,490 இடங்கள் நிரப்பப்படவில்லை. அதுபோலவே எஸ்.டி பிரிவினரில் 37,237 இடங்கள் நிரப்பப்படவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago