கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நெல்லை, தென்காசி மாவட்ட ஆட்சியர்கள்

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, மாநகரக் காவல் ஆணையர் தீபக் தாமோர், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் ஆகியோர் கரோனா தடுப்பூசியை இன்று போட்டுக்கொண்டனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்டபின் செய்தியாளர்களிடம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 418 மருத்துவர்கள் உட்பட 2829 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள 11,949 பேர் முன்பதிவு செய்துள்ளனர். கரோனா தடுப்பூசி போடும்பணி 5 கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது.

முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கும், 2-வது கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும், 3-ம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 4-வது கட்டமாக நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும், 5-வது கட்டமாக பொதுமக்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும்.

இதுவரை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எவ்வித பக்கவிளைவுகளும், பிரச்சினைகளும் ஏற்படவில்லை. எனவே அனைவரும் இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

அப்போது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.

தென்காசியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்