புதுச்சேரியில் புதிதாக 23 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (பிப்.3) தெரிவித்துள்ள தகவல்:
''புதுச்சேரி மாநிலத்தில் 2,184 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 8 பேருக்கும், காரைக்காலில் 5 பேருக்கும், மாஹேவில் 10 பேருக்கும் என மொத்தம் 23 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை. மேலும் மாஹேவைச் சேர்ந்த 64 வயது முதியவர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 652 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.67 ஆக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமாக 39 ஆயிரத்து 146 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் மருத்துவமனைகளில் 120 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 159 பேரும் என மொத்தம் 279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
» தென்காசியில் மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம்: கட்டண வசூல் பணி பாதிப்பு
» தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அஞ்சலி
இன்று 29 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 215 (97.62 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 5 லட்சத்து 82 ஆயிரத்து 116 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 5 லட்சத்து 38 ஆயிரத்து 13 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது''.
இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago