கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (20-ம் தேதி வெளியிடப்பட்டது.
கோவை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான, இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (20-ம் தேதி) வெளியிடப்பட்டது. சென்னை கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநரும், மாவட்டத்தின் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணி மேற்பார்வையாளருமான மு.கருணாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், வாக்காளர் பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
37,667 புதிய வாக்காளர்கள்
மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறும்போது, ‘‘தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி, கோவை மாவட்டத்தில் 15,09,531 ஆண் வாக்காளர்கள், 15,52,799 பெண் வாக்காளர்கள், 414 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் உள்ளனர்.
» சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட வர முடியாது: அமைச்சர் உதயகுமார்
18 முதல் 19 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்கள் 37,667 பேர் புதியதாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இனி வரும் காலங்களில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஏதுவாக தொடர் திருத்தப்பணிகள், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் நடக்கும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பாக www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், voters helpline app என்ற ஆண்ட்ராய்டு செயலியின் மூலமாகவும் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்களது திறன் குறைபாடு குறித்த விவரத்தை, வாக்காளர் அடையாள அட்டை எண் கொண்டு, அவரவர் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்கள், வட்ட அலுவலகங்கள் மூலமாகவும், பிடபிள்யூடி செயலி மூலமாகவும், 1950 கட்டணமில்லா வாக்காளர் சேவை மையம் மூலமாகவும் பதிவு செய்துகொள்ளலாம். வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களில், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தர இவ்விவரங்கள் பயன்படுத்தப்படும்’’ என்றார்.
தொகுதி வாரியாக விவரம்
மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம்:
மேட்டுப்பாளையம் (111) தொகுதியில் 1,43,198 ஆண்கள், 1,52,566 பெண்கள், 38 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,95,802 வாக்காளர்கள் உள்ளனர். சூலூர் (116) தொகுதியில் 1,54,197 ஆண்கள், 1,61,102 பெண்கள், 26 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,15,325 வாக்காளர்கள் உள்ளனர்.
கவுண்டம்பாளையம் (117) தொகுதியில் 2,29,997 ஆண்கள், 2,30,908 பெண்கள், 95 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 4,61,000 வாக்காளர்கள் உள்ளனர். கோவை வடக்கு (118) தொகுதியில் 1,69,287 ஆண்கள், 1,66,979 பெண்கள், 38 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,36,304 வாக்காளர்கள் உள்ளனர்.
தொண்டாமுத்தூர் (119) தொகுதியில் 1,60,579 ஆண்கள், 1,63,398 பெண்கள், 76 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,24,053 வாக்காளர்கள் உள்ளனர். கோவை தெற்கு (120) தொகுதியில் 1,25,416 ஆண்கள், 1,25,950 பெண்கள், 23 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,51,389 வாக்காளர்கள் உள்ளனர்.
சிங்காநல்லூர் (121) தொகுதியில் 1,60,790 ஆண்கள், 1,62,799 பெண்கள், 25 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,23,614 வாக்காளர்கள் உள்ளனர். கிணத்துக்கடவு (122) தொகுதியில் 1,59,148 ஆண்கள், 1,64,955 பெண்கள், 42 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,24,145 வாக்காளர்கள் உள்ளனர்.
பொள்ளாச்சி (123) தொகுதியில் 1,08,302 ஆண்கள், 1,17,443 பெண்கள், 32 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,25,777 வாக்காளர்கள் உள்ளனர். வால்பாறை (124) தொகுதியில் 98,617 ஆண்கள், 1,06,699 பெண்கள், 19 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,05,335 வாக்காளர்கள் உள்ளனர்.
மொத்தம் 15,09,531 ஆண் வாக்காளர்கள், 15,52,799 பெண் வாக்காளர்கள், 414 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் என ஒட்டுமொத்தமாக 30,62,744 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த செப்டம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதை ஒப்பிடும்போது தற்போதைய இறுதிப் பட்டியலின்படி, 41,309 ஆண்கள், 50,657 பெண்கள், 45 மூன்றாம் பாலினத்தவர்கள், 92,011 வாக்களர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போதைய பட்டியலின் அடிப்படையில் அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் தொகுதியில் 4,61,000 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக வால்பாறை தொகுதியில் 2,05,335 வாக்காளர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago