புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் பாஜக போராட்டம்: கர்நாடகத்திலிருந்து வரத் தொடங்கிய தொகுதி பொறுப்பாளர்கள்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்து மாநிலத்தின் 30 தொகுதிகளிலும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தோர் புதுச்சேரி வரத் தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, தொடரும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், பல மடங்கு உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணம், உயர்த்தப்பட்ட குப்பை வரி உள்ளிட்ட அரசின் பல்வேறு நடவடிக்கைகளைக் கண்டித்தும் புதுச்சேரி காங்கிரஸ் அரசின் செயலற்ற தன்மையைக் கண்டித்தும் புதுச்சேரி பாஜகவினர் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். அதன்படி 30 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போராட்டம் நடந்தது.

லாஸ்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று, புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கவுன்சிலர்கள், மேயர், மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் புதுவையின் 30 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் லாஸ்பேட்டை உள்ளிட்ட சில தொகுதிக்கு நியமிக்கப்பட்டோர் புதுச்சேரி வந்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறுகையில், "இம்மாத இறுதியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா புதுவைக்கு வருகிறார். அப்போது பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். முக்கியமானவர்கள் அக்கூட்டத்தில் இணைவார்கள்" என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

ஒரு நிமிட வாசிப்பு

2 years ago

மேலும்