சென்னை: நமது ‘இந்து தமிழ் திசை’ சார்பில் சென்னையில் நாளை (மார்ச் 16) மகளிர் திருவிழா நடைபெறவிருக்கிறது. முற்றிலும் பெண்களுக்காக அசத்தலான போட்டிகள், பேச்சரங்கம், கலை நிகழ்ச்சிகள், பரிசுகளுடன் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பல்வேறு சிறப்புப் பகுதிகளில் ஒன்றான, ‘பெண் இன்று’ ஞாயிற்றுக்கிழமைதோறும் வந்து கொண்டிருப்பது வாசகிகள் அறிந்ததே.
பெண்களின் மதிப்பை பல்வேறு நிலைகளில் உயர்த்துவதுடன், அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகத் திகழும் ‘பெண் இன்று’ சார்பில், கடந்த ஆண்டுகளில் தமிழகத்தின் முக்கிய ஊர்களில் மகளிர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
வாசகிகளின் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த ஆண்டும் மகளிர் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. வேலூர், கோவை, கடலூர் நகரங்களைத் தொடர்ந்து சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் (சிம்ஸ் மருத்துவமனை அருகில்) மகளிர் திருவிழா நாளை நடைபெறவுள்ளது.
நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் இவ்விழா மாலை வரை நடைபெறும். எழுத்தாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான ஓவியா, சமூகத்தில் பெண்களின் நிலை குறித்து பேசுகிறார். மகப்பேறு மருத்துவரும் ‘மித்ரா’ ஃபவுண்டேஷன் நிறுவனருமான டாக்டர் அமுதா ஹரி, ஆரோக்கியம் சார்ந்து பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து பேசுகிறார். பேச்சரங்கத்தைத் தொடர்ந்து கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
» அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
» பாஜகவால் ஜெயலலிதா ஆட்சியை தர முடியும்: டிடிவி.தினகரன் நம்பிக்கை
வாசகியருக்கு ஃபேஷன் ஷோ, பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட கலகலப்பான பல்வேறு போட்டிகளும் நடைபெற உள்ளன. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்புப் பரிசும், கலந்துகொள்ளும் அனைவருக்கும் பரிசுகளும் வழங்கப்படும். உஜாலா நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ இந்த விழாவை நடத்துகிறது.
லலிதா ஜூவல்லரி, லலிதாம்பிகை கருவுறுதல் மையம், மஹாத்ரி ஃபுட் புராடக்ட்ஸ், ஜெ.டி.எஸ் ஃபுட்ஸ் அண்ட் பர்பிள் ஸ்வீட்ஸ், சத்யா ஏஜென்சீஸ், கோபுரம் மஞ்சள்தூள் & குங்குமம் நிறுவனம், ஸ்ரீ ஐஸ்வர்யா சாரிஸ், ஸ்ரீ மாதங்கி டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் (நண்டு பிராண்ட்), ஹெஸ்த் பாஸ்கெட், சௌபாக்யா என்டர்பிரைசஸ், டோம்ஸ் ஸ்டேஷனரி, கெவின்ஸ் மில்க் ஷேக், காட்டன் ஹவுஸ், ரெபியூட் குடிநீர், பிரே லேடி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் (வடபழனி வளாகம்), பத்மம் ரெஸ்டாரன்ட், வாக் பக்ரி டீ உள்ளிட்ட நிறுவனங்களும் நிகழ்ச்சியை இணைந்து வழங்குகின்றன. பங்கேற்கும் வாசகிகள் அனைவருக்கும் மதிய உணவும், நிச்சயப் பரிசும் உண்டு.
நிகழ்ச்சியில் பங்கேற்க 99440 29700 - 9600038796 ஆகிய எண்களில் ஏதாவது ஓர் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள். https://www.htamil.org/MTVCHENNAIMagalir Thiruvizha - Chennai Event 2025/ www.htamil.org என்கிற இணைப்புக்கு சென்றும் பதிவு செய்யலாம். மகளிர் திருவிழாவில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் பங்கேற்கலாம். ஆண்களுக்கு அனுமதி இல்லை. விழாவில் பங்கேற்க அனுமதி இலவசம்.
முக்கிய செய்திகள்
வர்த்தக உலகம்
15 hours ago
வர்த்தக உலகம்
1 day ago
வர்த்தக உலகம்
4 days ago
வர்த்தக உலகம்
5 days ago
வர்த்தக உலகம்
7 days ago
வர்த்தக உலகம்
14 days ago
வர்த்தக உலகம்
16 days ago
வர்த்தக உலகம்
19 days ago
வர்த்தக உலகம்
19 days ago
வர்த்தக உலகம்
21 days ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
1 month ago