சென்னை: பள்ளிக் குழந்தைகளிடம் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா (DBSI), பல்வேறு சிறப்பான செயல்பாடுகளை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழோடு இணைந்து முன்னெடுத்து வருகிறது.
‘கோவிட்’ வைரஸ் தொற்றுப் பரவலின்போது நாம் அனைவருமே சில சுகாதாரப் பழக்கங்களை முறையாகக் கடைபிடித்தோம். அதிலொன்று, ‘கைகளைக் கழுவுதல்.’ தன் சுத்தத்தின் முதல் படியான கை கழுவும் பழக்கத்தை இன்று பலரும் தொடராமல் விட்டுவிட்டோம். கை கழுவுதலின் மூலமாக வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு ஆகியவற்றிலிருந்தும் நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.
டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா ‘சுத்தம் சுகாதாரம்’ திட்ட வழிகாட்டுதலின்படி, 20 விநாடிகளுக்கு நம் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் என்பதை குழந்தைகள் மனதில் பதிய வைக்கும் நோக்கில் குழந்தைகளுக்கான 13 வார சுகாதார விழிப்புணர்வுத் தொடர் வரும் தமிழ்ப் புத்தாண்டு (ஏப்ரல் 14) முதல் வெளிவரவுள்ளது.
இந்தச் சிறப்புப் பக்கத்தில் சுகாதார விளக்கப் படங்கள், குறுக்கெழுத்துப் போட்டி, வண்ணம் தீட்டுதல், பரிசுக்கான போட்டிக் கேள்விகள் ஆகியவை இடம்பெற உள்ளன. இதில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் முதல் 100 மாணவர்களுக்கு வாரந்தோறும் பரிசுகள் வழங்கப்படும்.
» அர்விந்த் கேஜ்ரிவால் மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
» டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ராஜினாமா: ஊழலில் திளைக்கிறது ஆம் ஆத்மி கட்சி என குற்றச்சாட்டு
பெற்றோர், ஆசிரியர் கவனத்துக்கு: பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் நல்ல சுகாதார பழக்க வழக்கங்களை மகிழ்ச்சியான விளையாட்டுகளின் மூலமாக கொண்டு செல்ல உதவும் இந்த சுகாதார செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பு தாருங்கள்.
உங்கள் குழந்தை களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி, இந்தப் பக்கத்தை அவர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள். நல்ல சுகாதாரப் பழக்கத்தைக் கற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு துணை நில்லுங்கள்.
ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் அறிவிப்புப் பலகைகளில் இந்தத் தொடரை வைத்து, இந்தத் திட்டத்தைப் பின்பற்ற மாணவர்களையும் ஊக்கப்படுத்துங்கள்.
முக்கிய செய்திகள்
வர்த்தக உலகம்
27 days ago
வர்த்தக உலகம்
30 days ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
5 months ago
வர்த்தக உலகம்
5 months ago