சங்கர் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: சங்கர் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 4 ஞாயிறன்று காலை 9 மணிக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள விவேகானந்தா அரங்கில் நடைபெற உள்ளது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படை தேவையான கல்வித்தகுதி என்ன, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதிக செலவு ஆகுமா என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.
அவ்வாறான தயக்கத்தைப் போக்கி, இத்தேர்வுகளுக்கு படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற நிகழ்ச்சி வரும் ஞாயிறன்று காலை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள விவேகானந்தா அரங்கில் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையருமான டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், ஐஏஎஸ், இந்திய விமான நிலைய ஆணையரகத்தின் சுங்கத்துறை துணை ஆணையர் பூ.கொ.சரவணன், ஐஆர்எஸ்., ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ், சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்ற உள்ளனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/ALP2024CHE என்ற லிங்கில் அல்லது இத்துடன் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, பதிவுசெய்து கொள்ளவும். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் ‘தேர்வுக்கு வழிகாட்டி’ நூலும், பாடத்திட்டக் குறிப்புகளும் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 min ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

17 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

உலகம்

30 mins ago

உலகம்

41 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

மேலும்