'குரூப் எம்' வழங்கும் ‘இந்து தமிழ் திசை’யின் 'வணிக வீதி  தொழில்முனைவோருக்கான களம்' - ஸ்டார்ட்அப் யுகத்தில் தொழில் தொடங்குவது எப்படி? | வழிகாட்டு நிகழ்வு 

By Sponsored Content

கோவை: தற்போதைய ஸ்டார்ட்அப் காலகட்டத்தில் தொழில் தொடங்குவது குறித்தும் நடத்திவரும் தொழிலை மேம்படுத்துவது குறித்தும் மக்களுக்கு வழிகாட்டும் நோக்கில் சர்வதேச மார்க்கெட்டிங் நிறுவனமான ‘'குரூப் எம்' வழங்கும் ‘இந்து தமிழ் திசை’யின் 'வணிக வீதி தொழில்முனைவோருக்கான களம்' வழிகாட்டி நிகழ்வு, வரும் 2023 டிசம்பர் 2 (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோயம்புத்தூர் சிரியன் சர்ச் சாலையிலுள்ள இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் இருசக்கர மின்வாகன தயாரிப்பில் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான ‘ஆம்பியர்’ நிறுவனத்தின் நிறுவனர் ஹேமா அண்ணாமலை இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார்.

இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவம் என்ன?

தற்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலகட்டத்தை தொழில்துறை வல்லுநர்கள் ‘ஸ்டார்ட்அப் யுகம்’ என்று வரையறுக்கிறார்கள்.

இந்தியாவில் 2016-ம் ஆண்டு 450 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருந்தன. இன்று அந்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 7,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. இந்தக் காலகட்டத்தில் நமது வழமையான தொழில்செயல்பாடுகள் மிகப் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகி வருகின்றன.

ஒருவர் சிறிய அளவில் உணவகம் நடத்தலாம், ஜவுளிக் கடையோ, காலணி விற்பனையகமோ வைத்திருக்கலாம். இந்த வழமையான தொழில் செயல்பாடுகள் கூட இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் புதிய பரிணாமத்துக்கு உள்ளாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

தொழில்முனைவோர்கள் இந்த மாற்றத்தை உணர்வதும், இந்த மாற்றத்துக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்வதும் அவசியம். அதற்கான வழிகாட்டும் நிகழ்ச்சிதான் இது.

தற்போதைய சூழலில் எப்படி தொழில் தொடங்கவேண்டும், நடத்திவரும் தொழிலை எப்படி மேம்படுத்த வேண்டும், எப்படி சந்தைப்படுத்த வேண்டும், நிறுவனத்துக்கு எப்படி நிதி திரட்ட வேண்டும் என்பன தொடர்பான வழிகாட்டுதல்களை தொழில்துறையில் சாதித்த முன்னோடிகள், இந்திய அளவில் கவனம் ஈர்க்கும் ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர்கள், ஏஞ்சல் இன்வெஸ்டர்கள், மார்க்கெட்டிங் துறை நிபுணர்கள் இந்நிகழ்ச்சியில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள். உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், அவசியம் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த லிங்க் மூலம் https://www.htamil.org/vvcbe சென்று பதிவு செய்யலாம்.அல்லது இத்துடன் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து நிகழ்வில் பதிவு செய்யலாம். பதிவுக் கட்டணம் ரூ.199/- மாணவர்கள் சிறப்புச் சலுகையாக ரூ.99/- (ஜிஎஸ்டி உட்பட) செலுத்தி, பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

27 days ago

வர்த்தக உலகம்

30 days ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

5 months ago

வர்த்தக உலகம்

5 months ago

மேலும்