தென்னிந்தியாவில் அதிகமாக பரிந்துரைக்கப்படும் டிஎம்டி முறுக்கு கம்பியான பாரதி டிஎம்டி கம்பி தனது கனவு பயணம் 1920-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல்லியாத் குழுத்தில் இருந்து தொடங்குகிறது. 90 ஆண்டுகள் பாரம்பரியத்துடன், பல தசாப்தங்களாக திட்டமிட்ட யுக்தி மற்றும் கலை செயல்பாடுகள் தொழில்நுட்பத்தால் பாரதி டிஎம்டி முறுக்கு கம்பிகள் தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தொடர்ந்து தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலமாக இன்று முன்னணி டிஎம்டி முறுக்கு கம்பியாக பாரதி டிஎம்டி முறுக்கு கம்பிகள் வளர்ந்துள்ளது.
வெறும் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களைக் கட்டுவது பாரதி டிஎம்டி பிராண்டின் நோக்கமில்லை. மாறாக நிறுவன மதிப்பு மற்றும் கொள்கைகளைக் கொண்ட வலிமையான தேசத்தைக் கட்டியெழுப்புவதேயாகும். இந்த 90 ஆண்டுகால பயணம் இந்த பிராண்டுக்கும் அதன் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுக்கும் நிறைவைத் தந்துள்ளது.
பாரதி டிஎம்டி கம்பி சமீபத்தில் தனது பிராண்ட் அம்பாசிட்டராக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை நியமித்திருக்கிறது. என்னவொரு பொறுத்தமான தேர்வாக அது அமைந்திருக்கிறது. தனது தொழில் மீது கொண்டுள்ள தனித்துவமான நாட்டம் காரணமாக எப்போதும் விரும்பப்படுகிற ‘ஆல் ரவுண்டராக’ ரவீந்திர ஜடேஜா திகழ்கிறார். அது போலவே பாரதி டிஎம்டி முறுக்கு கம்பிகளும் தரம், உறுதி மற்றும் பிணைப்பு ஆகியவைகளுக்கு தனித்துவமான முன்னுரிமையினைப் பின்பற்றுகிறது. இதனால் எஃகு போன்ற உறுதியுடைய ஆல் ரவுண்டர் ஒருவர் தென்னிந்தியாவின் முன்னணி எஃகு உற்பத்தியாளர்களுடன் இணைந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை.
பாரதி டிஎம்டி முறுக்கு கம்பிகள் ஒன்றுக்கும் அதிகமான சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ளன. இது சாதாரண முறுக்கு கம்பிகளைப் போல இல்லை. பாரதி டிஎம்டி முறுக்கு கம்பிகள் கொண்டு கட்டும் உங்கள் வீடு வெளிப்படுத்தும் தனித்துவத்தினால், இந்த பிராண்ட் உண்மையான ஆல் ரவுண்டராக திகழ்கிறது. அது உங்கள் வீடுகளுக்கு சிறந்த தரத்தினையும், வலிமையையும் (550 ஹெச்எஸ்டி) தருகின்றது. இந்த டிஎம்டி கம்பிகளின் 40 அடி நீளம், அதனைக் கட்டுமானத்திற்கு வசதியான ஒன்றாக மாற்றுகிறது. இந்த பிராண்டின் ஒவ்வொரு கம்பிகளும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதன் தனித்துவமான முறுகிய வளைவான அமைப்பு இந்தக் கம்பிகளை சிமெண்டுடன் எளிதாக பிணைக்க உதவி செய்கின்றன.
பாரதி டிஎம்டி முறுக்கு கம்பிகள் கரிமங்களின் தடங்களைக் குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளன. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் க்ரீன் ப்ரோ சான்றளிக்கப்பட்டவை. இதனை மெய்ப்பிக்கும் விதமாக கழிவுகளை குறைத்து நிலைத்தன்மையை மேம்படுத்தும் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் வகையில், சூழலுக்கு உகந்த முறையில் உற்பத்தி செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
பாரதி டிஎம்டி முறுக்கு கம்பிகள், ஹெச் அண்ட் கே தெர்மக்ஸ் ஜெர்மனி தொழில்நுட்பத்துடன், மேம்படுத்தப்பட்ட முறையில் முறுக்கப்பட்டு சிறந்த வலிமையுடனும், வளையும் தன்மையுடைய வடிவமைப்புடனும் உருவாக்கப்படுகின்றன. பாரதி டிஎம்டி முறுக்கு கம்பிகள், அதன் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதி மற்றும் மூலப்பொருள் தேர்விலுள்ள நிபுணத்துவம் காரணமாக, சிறந்த வலிமையையும், ஒன்றிணையும் தன்மையையும் தருகின்றன என்று அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.
சந்தைகளில் உள்ள மற்ற டிஎம்டி கம்பிகளில் பாரதி டிஎம்டி முறுக்கு கம்பிகளும் ஒன்றில்லை என்று நாம் சொல்லும் போது பல்வேறு தனிச்சிறப்புகளால் சந்தைகளில் தனித்த இடம்பிடித்துள்ள பாரதி டிஎம்டி கம்பிகள் அதை முற்றிலும் உண்மை என்றே நிரூபிக்கின்றன. அந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு டிஎம்டி கம்பிகளையும் நாம் சோதித்து பார்த்தால் கீழ்கண்ட உண்மைகள் நமக்கு புலப்படும்.
> இந்தியாவின் மிகவும் நம்பகமான எஃகு உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கும் 100 சதவீதம் சுத்திகரிக்கப்பட்ட எஃகு பில்லெட்டுகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் முறுக்கு கம்பிகள் ஒரே மாதிரியான வடிவம், தரத்தைக் கொண்டுள்ளது. சிறந்த பில்லெட்களின் வேதிவினையாற்றல் குறைந்தபட்ச 550N/mm2 வலிமை உறுதிப்படுத்தப்படுகிறது. இது பழைய Fe500 கம்பிகளில் இருந்து இந்தக் கம்பிகளை வேறுபடுத்திக் காட்டுகிறது.
> விநாடிக்கு 30 மீட்டர் வரை சுழலக் கூடிய முற்றிலும் தானியங்கி வகையில் இயக்கப்படும் 23 பாஸ் சுழற்சி, கம்பிகள் ஒரே சீரான அளவு மற்றும் குறைந்த வெகுவான சகிப்புத்தன்மை பெறுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
> பொருள்களின் நிலையான தரத்திற்காக, ஜிஎம்பிஹெச்-லிருந்து பெறப்பட்ட மேம்பட்ட சிசிடி ஆப்டிகல் எமிஸன் ஸ்பெக்ட்ரோ கொண்டு மூலப்பொருள்களின் பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
> ஜெர்மனியிலிருந்து பெறப்பட்ட தெர்மேக்ஸ் க்யூஎஸ்டி தொழில்நுட்பம், முழு கம்பிகளுக்கும் சிறந்த வலிமை, ஒரே மாதிரியான தரம் மற்றும் வடிவத்தை வழங்குகிறது.
> சீரான வெப்பத்தைக் கொடுப்பதற்காக, முற்றிலும் தானியங்கி முறையிலான 1,200 டிகிரி அளவிலான எண்ணெய் வகை உலை பயன்படுத்தப்படுகிறது. இதன்பொருள், முற்றிலும் தானியங்கி வகையிலான உலைகலன் எஃகு பில்லெட்டின் வெப்பநிலையை 1,200 டிகிரியில் பராமாரிக்கிறது.
> வேண்டிய வடிவங்களில் கம்பிகளை வெட்டி எடுப்பதற்கு, இத்தாலி ஹைட்ராலிக் கத்திரிப்பான் கொண்ட, ஆஸ்கேம் ரீபர் வெட்டும் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சரியான வடிவத்தினை பெற முடிகிறது.
> தானியங்கி வகையிலான குளிரூட்டும் அமைப்பு, தானாகவே வெப்பம் தணிக்கும் வசதியினைத் தருகிறது. கம்பிகளின் சீரான வலிமைக்கு உதவுகிறது.
> கட்டுப்படுத்தப்படக்கூடிய 30mps பிஎல்சி சுழற்சி எந்திரம் அசாத்தியமான வேகத்தினை பெற உதவுகிறது.
> பாரதி டிஎம்டி முறுக்கு கம்பிகள் அதன் தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்வதில்லை என்பதால், அதன் தயாரிப்புகள் குறைந்த அளவிலான சல்பர் மற்றும் பாஸ்பரஸ் உள்ளடக்கத்தினை கொண்டுள்ளன.
பாரதி டிஎம்டி முறுக்கு கம்பியை சிறப்பானதாக்கும் அம்சம்:
> பில்லெட்களின் சிறப்பான வேதிவினையாற்றல், காங்கிரீட்களுடன் இணைந்து முறுக்கு கம்பிகளின் ஆயுளை அதிக நாட்கள் நீடிக்கச் செய்கிறது.
>கம்பிகளின் நீட்டித்த தன்மை மற்றும் உள்வலிமை கட்டிங்களின் வடிவமைப்பில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது.
> முறுக்கு கம்பிகளின் சிறப்பான வளைவு வடிவங்கள் மற்றும் சர்வதேச தரம் சிமெண்ட்-ஐ போல கான்க்ரீட்களுடன் பிணையும் தன்மைக்கு வழிவகுக்கிறது.
> தொழில்துறை தரமான 545N//mm2-க்கு மேல் இருக்கும் 600N//mm2 குறைந்தபட்ச இழுவிசை தன்மை (உடையும் வலிமை) சிறந்த ஒன்றிணையும் தன்மையைத் தருகிறது.
> சிறந்த வலிமையுடன் கூடிய 18 சதவீத நீடிப்புத் திறன் உத்திரவாதமுடையது.
> டிஎம்டி கம்பிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சிறந்த தரமான மூலப்பொருள்கள், பாரதி டிஎம்டி முறுக்கு கம்பிகளின் பிராண்ட் இன்றும் சந்தைகளில் சிறந்த ஒன்றாக வைத்திருக்கிறது.
பாரதி டிஎம்டி முறுக்கு கம்பிகளை அதன் உள்கட்டமைப்பு தரத்திற்காக சிறந்த ஒன்றாக தேர்வு செய்யலாம். அதன் மேம்படுத்தப்பட்ட பூகம்பத்தை தாங்கும் திறன் என்பது பாரதி டிஎம்டி முறுக்கு கம்பிகளின் பலங்களில் ஒன்று. பாரதி தயாரிப்பான டிஎம்டி கம்பிகளின் வளையும், ஒன்றிணையும், அதிர்வுகளைத் தாங்கும் திறன் கட்டிடங்களுக்கு பூகம்பத்தை தாங்கி நிலைக்கும் திறனைத் தருகின்றது. பாரதி டிஎம்டி கம்பிகளின் தரம், வலிமை, முறுக்கு வளைவு மற்றும் எடைகளால் அது தனித்துவமான திறன்கொண்டதாக இருக்கின்றது. அதன் பண்புகளில் ஒன்றாக குறைந்த அளவிலான சல்பர் மற்றும் பாஸ்பரஸ் உள்ளடக்கம் டிஎம்டி கம்பிகளுக்கு சிறந்த வலிமையையும் தூய்மையும் வழங்குகின்றன. குறைந்த கார்பன் அளவினால் அதிகமாக ஒன்றிணையும், பற்றவைக்கும் திறனைக் கொண்டுள்ளது.
சிமெண்டுடன் விரைவாக பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள புதுமையான முறுக்கு வளைவுகள், மென்மையான நுண்ணமைப்புகளைக் கொண்ட ஃபெர்ரிட், பெர்லிட் கோர் தரும் சிறந்த வளையும் தன்மை, புதுமையான HYQST தொழில்நுட்பத்தினால் கிடைக்கும் சீரான நுண்ணியவடிவம், சிறப்பான அரிப்பினைத் தடுக்கும் அம்சம், டிஎம்டி கம்பிகளை பிணைக்க பயன்படுத்தப்படும் உயர்தரமான வைர்கள் டிஎம்டி கம்பிகளை துருப்பிடித்தலில் இருந்து காக்கும் தன்மை போன்றவை சந்தைகளில் பாரதி டிஎம்டி கம்பிகள் இன்றும் சிறந்ததாக விளக்குவதற்கான வேறு சில காரணங்களாகும்
சிறந்த செயல்திறன்களுக்காக, பாரதி டிஎம்டி முறுக்கு கம்பிகள் நீண்ட வேதியியல் மற்றும் பிற பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்படுகிறது. உதாரணமாக, மூலப்பொருள் மற்றும் முடிவுற்ற பொருள்களின் வேதியியல் பகுப்பாய்வுக்காக, ஒளி உமிழ்வுச் சோதனை (optical emissions spectrometry) பயன்படுத்தப்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட டிஎம்டி கம்பிகளின் நிலைத்தன்மையை உறுதி செய்ய சர்வதேச சோதனை எந்திரம் (Universal Testing Machine) நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பாரதி டிஎம்டி கம்பிகளின் சிறந்த நிர்வாகக் குழு, தொடர்ந்து தொழில்நுட்பத்தினை புதுப்பித்துக்கொள்வதன் மூலமாக சிறந்து விளங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. அவர்கள் கைகொள்ளும் அதிநவீன தொழில் நுட்பம் எல்லா நேரங்களிலும் இந்த பிராண்டினை முன்னணியில் இருக்கச் செய்வதுடன், போட்டியாளர்களிடமிருந்து தனித்தும் தரத்துடன் இருக்கச் செய்கிறது. அதே போல இந்தக்குழுவிடம், தென்னிந்தியா முழுவதற்கும் சரக்குகளை எடுத்துச்செல்ல நீளமான 40 அதிநவீன டிரக்குகளும் உள்ளன.
இந்த நிறுவனம், விற்பனை, ஆர்டர்கள் மற்றும் சரக்குகளை கையாள, கண்காணிக்கும் வகையிலான எளிமையான நிர்வாக அமைப்பினையும், வாடிக்கையாளர்களின் சிரமங்களுக்கு தீர்வு அளிக்கும் வகையில் 24 மணிநேரமும் இயங்கும் வாடிக்கையாளர் சேவையினையும் கொண்டுள்ளது.
நீடித்து நிலைத்திருக்கும் சிறந்த டிஎம்டி முறுக்கு கம்பிகளை உற்பத்தி செய்வதைத் தவிர, இந்த முன்னணி பிராண்ட் கட்டுமானத்திற்கு தேவையான பல்வேறு வகையான பிறவகை கம்பிகளை பாரதி கம்பிகள் என்ற பெயரில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகிறது. டிஎம்டி கம்பிகள் மற்றும் கட்டுமான பொருள்களை பிணைக்க ஐஎஸ்ஐ சான்றளிக்கப்பட்ட கம்பிகளைப் பயன்படுத்துவது சிறந்த தரத்திற்கும், வணிகத்தில் உண்மையாகவும் நேர்மையாகவும் விளங்க உதவுகிறது. அதேநேரத்தில் இந்த கம்பிகள் ஒரே சீரான வடிவம், எளிதில் துரு பிடிக்காத தன்மை, வீணாகாத தன்மையைக் கொண்டுள்ளன என்பதை விளக்கத்தேவையில்லை.
இந்த முன்னணி டிஎம்டி முறுக்கு கம்பி பிராண்ட் பாரதி ரிங்க்ஸ் என்ற மற்றொரு பொருளையும் தயாரித்து வழங்குகிறது. இது, டிஎம்டி முறுக்கு கம்பிகளை தேவையான வடிவத்தில் வெட்டுவதற்கு உதவிடும் அதே வேளையில் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன் கம்பிகள் வீணாவதையும் தடுக்கிறது. இது பல்வேறு வகையான வேலைகளுக்கான பயன்களையும் தருகிறது.
ஐஎஸ்ஓ சான்றுகள் (ISO CERTIFICATIONS)
> 14001:2015 சான்று
> ஐஎஸ்ஓ 9001:2015 சான்று
> ஐஎஸ்ஓ 45001:2018 சான்று
> நிறுவனத்தின் திறமையான ஆற்றலுக்காக யுஎன்டிபி இந்தியா மற்றும் மத்திய எஃகு துறை அமைச்சகத்தின் பாராட்டுச் சான்றினைப் பெற்றுள்ளது.
> தனது தயாரிப்புகளுக்காக க்ரீன் ப்ரோ சான்று
> எஃப்ஐஇஒ (Federation of Indian Export Organization) உறுப்பினர் அந்தஸ்துடன், பிரிட்டிஷ் தரச்சான்று
> ஐஜிபிசி (Indian Green Building Council) உறுப்பினர் அந்தஸ்து.
> இந்தியா 5000 சிறந்த எம்எஸ்எம்இ விருது (சிறந்த தரத்திற்காக)
> என்ஏபிஎல்-ன் அங்கீகாரம் பெற்ற ஆய்வகம் (தென்னிந்தியாவின் முதல் டிஎம்டி உற்பத்தியாளர்)
> சிறந்த பிராண்ட் விருது ( 550ஹெச்டிஎஸ் தர டிஎம்டி கம்பிகள் உற்பத்தி பிரிவில், ஆத்மநிர்மான் திட்டத்திற்கான பிராண்ட் பங்களிப்பிற்காக)
முக்கிய செய்திகள்
வர்த்தக உலகம்
1 day ago
வர்த்தக உலகம்
1 day ago
வர்த்தக உலகம்
16 days ago
வர்த்தக உலகம்
25 days ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
5 months ago
வர்த்தக உலகம்
5 months ago
வர்த்தக உலகம்
5 months ago