சென்னை
பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியாவும் இணைந்து ‘சுத்தம் சுகாதாரம்’ எனும் இணைய வழி விழிப்புணர்வு நிகழ்வை நடத்தின. இதனால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மத்தியின் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வைக் கொண்டுசெல்ல முடிந்தது.
தற்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் கரோனா வைரஸ் தொற்று பரவிவரும் சூழலில், மக்களிடம் மீண்டும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் வகையிலும் தொடர்ந்து சுகாதாரத்தை கடைப்பிடிக்கத் தூண்டும் நோக்கிலும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் இசையில் ஐந்து விழிப்புணர்வு பாடல்கள் உருவாக்கப்பட்டு, டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியாவினால் வெளியிடப்படுகிறது.
இதில், ‘தமிழ்நாட்டை மேலும் நலமாக்க வாரீர்...’ என்ற பாடலை பாடகர் அசல் கோலார், ‘பள்ளியில் சுகாதாரம்’ என்ற பாடலை பாடகர் வேல்முருகன், ‘சுற்றுச்சூழல் சுகாதாரம்’ என்ற பாடலை அந்தோணிதாசன், ‘கை கழுவுதலின் முக்கியத்துவம்’ என்ற பாடலை இசைவாணி, ‘வீட்டில் சுகாதாரம்’ என்ற பாடலை கிரிஷாங் ஆகியோர் பாடியுள்ளனர்.
இந்த நிகழ்வு குறித்து ரெக்கிட் தெற்காசியாவின் மூத்த துணைத் தலைவர் கெளரவ் ஜெயின் கூறும்போது, “கலையும் இசையும் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்குவதற்கும் மனிதர்களிடம் நல்ல பண்புகளை வளர்த்தெடுப்பதற்கும் வழிவகுக்கும் சக்திமிக்க கருவியாகும். சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வினை மக்களிடம் கொண்டு சேர்க்க இசையெனும் கருவியை பயன்படுத்தியுள்ளோம். சுகாதாரத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் நாட்டுப்புற வடிவிலான இசைப்பாடல்கள் மூலமாக குழந்தைகள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்கிறோம். வளமான இந்தியாவை உருவாக்கிட தன்சுத்தத்தின் அவசியத்தை உணர்த்தும் ரெக்கிட் நிறுவனத்தின் இந்த முன்னெடுப்பானது, தேசத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வழி வகுக்கும்” என்றார்.
மேலும், ரெக்கிட் (SOA) நிறுவன வெளிவிவகாரங்கள் மற்றும் கூட்டாண்மைக்கான இயக்குநர் ரவி பட்னாகர் கூறுகையில், “இசையானது மக்களின் மனங்களை ஒன்றிணைத்து, சமூகத்திற்கு நல்ல பயன்களைத் தருகிற ஒரு வடிவமாகும். தமிழகம் புகழ்மிக்க நாட்டுப்புற இசையையும் மற்றும் சிறந்த பண்பாட்டையும் கொண்டு விளங்குவதால், இந்த சுகாதார விழிப்புணர்வு பாடல்கள் ஒரு சிறந்த மாற்றத்தை தமிழக மக்களிடம் உருவாக்கும். டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா மூலமாக நாங்கள் முன்னெடுக்கும் இம்முயற்சியானது அடித்தட்டு மக்களிடம் மாற்றத்தை உருவாக்கி, ஒரு வளமான இந்தியாவை படைக்குமென நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
இந்த சுகாதார விழிப்புணர்வு பாடல்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியதாவது; “இந்தியா ஒரு வளர்ந்து வரும் தேசமாகும். ஆனாலும் இன்னும் பல துறைகளில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். அதில் சுகாதாரமும் ஒன்று. டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வடமாநிலங்களில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை கொண்டு சென்றதோடு, தற்போது தமிழகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சுகாதார விழிப்புணர்வு பாடல்களை வெளியிட்டுள்ளது. தமிழகம் முன்னரே சுத்தம் சுகாதாரம் செயல்பாடுகளில் முன்னணியில் உள்ளது. இந்த விழிப்புணர்வு பாடல்கள் அடுத்த கட்டத்தை நோக்கி தமிழகத்தை கொண்டு செல்லும்” என்றார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்கவிருக்கிறார்.
மேலும், இவ்விழாவில், சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிகழ்வில் அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்கலாம்.
சுத்தம் சுகாதாரத்தின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பாடல்கள் வெளியீட்டு விழா வரும் 2023 ஏப்ரல் 28 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 5 மணியளவில் சென்னை டிடிகே சாலையிலுள்ள கஸ்தூரி சீனிவாசன் அரங்கில் (மியூசிக் அகாடமி மினி ஹால்) நடைபெறவுள்ளது.
தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் கடிதம்.
முக்கிய செய்திகள்
வர்த்தக உலகம்
8 days ago
வர்த்தக உலகம்
11 days ago
வர்த்தக உலகம்
15 days ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
5 months ago
வர்த்தக உலகம்
5 months ago