தனது சவார்ட் என்னும் வெல்த் மேனேஜ்மென்ட் செயலி (Savart - Wealth Management App) ஊடாக முதலீட்டாளர்கள் சரியான முதலீட்டை மேற்கொள்ள உதவி வருகிறார் 23 வயதான சங்கர்ஷ் சந்தா. எல்லா இளைஞர்களையும் போல தேடலில் அதீத ஆர்வம் கொண்டவர். பெஞ்சமின் கிரஹமின் முதலீடு சார்ந்த கட்டுரைகளை வாசித்தவருக்கு அதில் கிடைத்த உத்வேகம் பங்குச் சந்தை சார்ந்து அவரை ஈர்த்துள்ளது.
பெஞ்சமின் கிரஹம், அமெரிக்க நாட்டை சேர்ந்த பொருளியல் நிபுணர். நிறுவனங்கள் குறித்த விரிவான மதிப்பீடுகளை மேற்கொள்வார். வணிக உலகின் நிகழ் வெற்றிகளில் கவனம் செலுத்துபவர். அதே நேரத்தில் பங்குச் சந்தைக்கு என உள்ள சென்டிமென்ட்களை புறந்தள்ளுபவர். அவரது சித்தாந்தங்கள் சங்கர்ஷ் சந்தாவுக்கு முதலீடு சார்ந்து செயல்பட செய்துள்ளது. அதன் காரணமாக தனது சகோதரியின் டிமேட் கணக்கை கொண்டு அவர் முதலீடு செய்ய தொடங்கி உள்ளார். தொடர்ந்து உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் நிதிநிலை குறித்து அறிந்து கொண்ட அவர் தனது உதவித்தொகையையும் (ஸ்காலர்ஷிப்) முதலீடு சார்ந்து பயன்படுத்தி உள்ளார்.
அவரது முதலீடுகள் அப்படியே வேகமாக பெருகியுள்ளன. அதில் ஒரு தொகையை கொண்டு சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். "இரண்டு ஆண்டுகால இடைவெளியில் சுமார் 1.5 லட்சம் ரூபாயை நான் முதலீடு செய்திருந்தேன். எனது பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் 13 லட்சம் ரூபாயாக மாறியது" என சங்கர்ஷ் சொல்கிறார்.
முறையான கட்டுப்பாடு கொண்ட முதலீட்டின் சக்தியை பெருவாரியான மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமென அவர் ஒருகட்டத்தில் உணர்ந்துள்ளார். குறிப்பாக சந்தை முதலீடு குறித்து அஞ்சும், தவறான தகவல்களை மக்கள் பெறுகிறார்கள் என்பதையும் அவர் அறிந்து கொண்டுள்ளார். அதன் காரணமாக தன் வசம் இருந்த பங்குகளில் சுமார் 8 லட்ச ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று கடந்த 2017-ல் தனது நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
Savart நிறுவனம் தொடக்கம்: அவரது பிசினஸ் மாடல் மிகவும் எளிமையானது. HNIS முதலீடு மேற்கொள்ளும் வகையில் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பை வழங்க அவர் விரும்பினார். அதற்காக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீண்டகால முதலீட்டின் செயல்திறன் மற்றும் போர்ட்ஃபோலியோ குறித்த விவரங்களை வழங்குகிறார். இதன் மூலமாக இந்திய நிறுவனம் ஒன்று உலகளாவிய நிதி சார்ந்த தொழில்நுட்ப பிராண்டாக உருவானது.
உலகளவில் விரிவாக்கம்: Savart தற்போது கனடா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தனது செயல்பாட்டை விரிவு செய்துள்ளது. அதோடு அங்கு உள்ளூர் அரசிடமிருந்து மானியம் மற்றும் முதலீடுகளையும் உறுதி செய்துள்ளது. மேலும், 1 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ள பயனர் தளம் மற்றும் அதன் வெல்த் மேனேஜ்மென்ட் சேவை கொடுத்துள்ள ஆலோசனையின் கீழான 800 கோடிக்கும் மேற்பட்ட சொத்து மதிப்பை விரிவு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
அனைவரும் நிதி ரீதியான பாதுகாப்பான எதிர்காலத்திற்கு தகுதி கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்ற நம்பிக்கையில் Savart நிறுவனத்தை சங்கர்ஷ் நிறுவினார். இந்த நிறுவனத்தின் ஏஐ சார்ந்த ஆய்வு மற்றும் பரிந்துரைகள் முதலீட்டாளரின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவை. முதலீட்டாளர்கள் சந்தை சார்ந்த செயல்திறன் இலக்கை அடைய செய்வதுதான் இதன் நோக்கம்.
"எப்போது, எங்கே, எவ்வளவு, எப்படி முதலீடு செய்வது?" என்ற கேள்விகளுடன் சந்தேகம் கொண்டுள்ள முதலீட்டாளர்கள் தங்கள் நிறுவனத்தின் ஆலோசனையை பெறலாம் என அவர் தெரிவிக்கிறார்.
ஏஐ சார்ந்த தனித்துவமிக்க போர்ட்ஃபோலியோவில் உள்ள சாதகம் என்ன?
எல்லையற்ற ஆய்வு சார்ந்த வளம்...
* பில்லியன் கணக்கான டேட்டா புள்ளிகளை உள்ளடக்கிய ஆய்வு மற்றும் ஆலோசனைகள்.
* ஆல்பா / ரிட்டர்ன் ஜெனரேஷன்
* இந்த தரவுகள் மூலம் ஆலோசனை பெறும் பயனர்கள் சந்தையில் சிறப்பாக செயல்படும் திறனை பெறலாம்.
நிகழ் நேர (ரியல் டைம்) போர்ட்ஃபோலியோ டிரேக்கிங்...
ஏஐ தொழில்நுட்பம் உறக்கமின்றி போர்ட்ஃபோலியோவை கண்காணிக்கும். நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில் அதுகுறித்து விரைந்து தெரிவிக்கும்.
பயனர்கள் மலிவான சந்தா கட்டணத்தில் இந்த சேவையை பெற கூடிய வகையில் இதன் சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
Savart ஏஐ சேவையை முதலீட்டாளர்கள் மற்றும் அதில் ஆர்வம் உள்ளவர்கள் பெறுவது எப்படி?
* தனது கிளையன்ட்களுக்கு முதலீடு சார்ந்த ஆலோசனையை வழங்கி வரும் Savart ஏஐ சேவையை பெற விரும்புவர்கள் தங்கள் போனில் Savart செயலியை பிளே ஸ்டோர் அல்லது ஐஓஎஸ் ஸ்டோரில் டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
* பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணை கொண்டு லாக்-இன் செய்ய வேண்டும்.
* பயனர்களின் விவரங்களை சரிபார்க்க கேஒய்சி விவரங்கள் இதில் கேட்கப்படும். இந்த விவரங்களை பயனர்கள் எளிதில் கொடுக்க முடியும்.
* தொடர்ந்து பயனர் குறித்து அறிந்து கொள்ள ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இது EFG அனாலிஸிஸ் சார்ந்து கேட்கப்படுகிறது.
* பின்னர் பயனர்கள் தங்கள் நிதி இலக்குகளை நிர்ணயிக்க அனுமதிக்கிறது.
* இங்கிருந்து பயனர்கள் அவர்களது நிதி இலக்குகளை அடைவதற்கான சரியான முதலீடு சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கிறது.
* அடுத்த சில நொடிகளில் பயனர்களின் தனித்துவமிக்க முதலீடு சார்ந்த திட்டம் கிடைக்கும். அதுவும் சந்தையில் உள்ள வாய்ப்புகளை கொண்டு மேற்கொள்ளப்படும் திட்டம் இது.
* மேலும் பயனர்கள் தங்கள் இலக்கை அடைய கிளையன்ட் டிலைட் அசோசியேட் ஒருவரையும் நியமிக்கும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களது உதவியை பயனர்கள் பெறலாம்.
எங்களது மாஸ்டர் பிரான்சைஸை சென்னையிலும், தமிழகம் முழுவதும் பிரான்சைஸ்களையும் நாங்கள் திறந்துள்ளோம்.
முக்கிய செய்திகள்
வர்த்தக உலகம்
23 days ago
வர்த்தக உலகம்
26 days ago
வர்த்தக உலகம்
30 days ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
5 months ago
வர்த்தக உலகம்
5 months ago