சாலையோரமாய் நடந்துபோய் கொண்டிருந்தார் சுந்தரம். பின்பக்கமாக வண்டி ஹாரன் சத்தம் ஒலிக்கவே, திரும்பிப் பார்த்தார்.
டூ வீலரில் சிரித்தபடி, “வணக்கம்… சுந்தர்” என்றார் வெங்கட். சுந்தரத்தோடு கல்லூரியில் படித்தவர்.
“வணக்கம்ப்பா. என்ன நல்லாயிருக்கீயா..?” என்று சுந்தரம் கேட்டார்.
“நான் நல்லாத்தான் இருக்கேன். என்ன நடந்து போற, வண்டி என்னாச்சு..? எங்கே போகணும் சொல்லு..? நான் கொண்டுபோய் விடுறேன்..!” என்றார் வெங்கட்.
“அதெல்லாம் வேண்டாம். நான் வாக் போறேன்…” என்றார் சிரித்தபடி.
“என்ன வாக் போறியா..? பக்கத்து தெருவிலே இருக்கிற கடைக்குக்கூட நீ வண்டில போற ஆளாச்சேப்பா..!” ஆச்சரியத்துடன் கேட்க,
“ஆமாம்; அப்படித்தான் இருந்தேன். இப்பத்தான் வாக் போறதோட முக்கியத்தையும், அதனாலே உண்டாகிற நன்மைகளையும் தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப நாலு மாசமா டெய்லி காலை, மாலை ரெண்டு நேரமும் வாக் போறேன். உடம்பும் நல்லா இருக்கு. மனசுக்கும் புத்துணர்வா இருக்கு” என்று சொல்லும்போதே சுந்தரத்தின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது.
“என்னப்பா, விட்டா நடைப்பயிற்சி பத்தி வகுப்பே எடுத்துருவே போலிருக்கு. நீ சொல்றதும் உண்மைதான் சுந்தர். நாலஞ்சு வருஷமா டெய்லி நானும் நடந்துக்கிட்டு இருந்தேன். இப்ப ரெண்டு மாசமா நடக்கிறதில்லே. உடம்பே ஒரு மாதிரியிருக்கு” வெங்கட் சொன்னதும்,
“சரி… சரி. திரும்பவும் நடக்க ஆரம்பி. எல்லாம் நல்லதே நடக்கும். நா வரட்டா..?” என்று சொல்லிவிட்டு, கைவீசி நடக்கத் தொடங்கினார் சுந்தரம்.
இன்றைக்கு யாராவது சிலர் தெருவில் நடந்துபோனாலே, “என்ன நடந்துபோறீங்க..?” என்று ஆச்சரியமாகக் கேட்கிறார்கள். ஆனால், வாகன வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் மக்கள் பெரும்பாலும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கால்நடையாக நடந்துபோய் தான் வந்தார்கள்.
ற்றோட்டமான பொதுவெளியில் கைவீசி நடக்கும்போது, உடலும் மனமும் புத்துணர்வு பெற்றன. நடப்பது என்பதும் ஒரு வகை உடற்பயிற்சி என்பதை அறியாமலேயே மக்கள் நடந்தனர். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தனர்.
ஆனால், வாகன வசதி வாய்ப்புகள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் நடப்பது என்பதே பெரும்பாலும் குறைந்துபோய் விட்டது. பக்கத்து தெருவில் இருக்கும் நண்பரின் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றாலும், உடனே இரு சக்கர வாகனத்தை எடுத்து விடுகிறோம். இதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கிறது. உடல் எடை கூடுவதன் காரணமாக பல்வேறு உடல் உபாதைகளும் உடன் வந்து சேர்ந்து கொள்கின்றன. இது பெரியவர்களை மட்டுமல்ல, இன்றைய குழந்தைகளையும் பாதிக்கிறது.
இன்றைக்கு சாலைகளில், பூங்காக்களில், வீட்டு மொட்டை மாடிகளில் என பலரும் நடைப்பயிற்சி மேற்கொள்வதைப் பார்க்க முடிகிறது. நோய் வருமுன்னே நாம் நல்ல ஆரோக்கித்துடன் இருக்க வேண்டும். நமது உடலை நலத்துடனும் வைத்துக்கொள்வது மிகவும் நல்லது தானே..! நடக்கிறதினாலே அப்படி என்ன தான் நன்மை நடக்கிதுன்னு நீங்கள் கேட்பது புரிகிறது.
இதோ… நமக்காக டாக்டர் சொல்கிறார். என்னவென்று படிப்போமா..!
டாக்டர் தர்மேஷ் குபேந்திரன், பிஏ.எம்.எஸ்., எம்.எஸ்.சி., எம்ஃபில்.,
(விளையாட்டு பயோ மெகானிக்ஸ் & கைனசியாலஜி),
பி.ஹெச்டி., (விளையாட்டு முறை பயிற்சி).
நடைப்பயிற்சி அளிக்கும் பலன்கள்:
நடப்பது என்பது மனிதர்களுக்கானது. நடையின் அழகு என்னவென்றால், அது செலவில்லாதது. இதற்கு எந்த தனி கருவியும் தேவையில்லை என்பதோடு எங்கிருந்தாலும் மேற்கொள்ளலாம். பலரும் வாழ்நாள் முழுவதும் நடைப்பயிற்சி செய்கின்றனர். சரியாக மேற்கொள்ளப்பட்டால், நடைப்பயிற்சியே நமக்கு தேவைப்படும் ஒரே ஏரோபிக் பயிற்சியாகும். நம்முடைய பாதங்களை நகர்த்தும் இந்த எளிமையான செயல், பல்வேறு ஆரோக்கிய பலன்களை அளிக்கும் மற்றும் நீண்ட ஆயுள் அளிக்கும் என்றும் எண்ணற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நடைப்பயிற்சி அதிக ஆய்வுக்குள்ளான உடல் பயிற்சியாக இருக்கிறது.
ஆரோக்கிய பலன்கள்:
வழக்கமான சுறுசுறுப்பான நடை, நம்பிக்கை, உடல் வலு, ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்தி, எடை கட்டுப்பாடு, வாழ்நாள் எதிர்பார்ப்புக்கு உதவுவதோடு மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
இதய நோய் ஆபத்து, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், கழித்தல் ஆகியவற்றை இது குறைக்கிறது. மலம் கழித்தலை எளிதாக்குகிறது. நடைப்பயிற்சி உடலுக்கு நலன் தருவதோடு, நினைவுத்திறன் மேம்பாடு, கற்றல் திறன், கவனம், படைப்பூக்கம் ஆகியவற்றுக்கு உதவி, மனநிலையை மேம்படுத்தும் வகையில் மனதுக்கும் நல்லது என பல அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நடைப்பயிற்சி வகைகள் மற்றும் பலன்கள்:
1. நிதான நடை - மெதுவான, சாந்தமான நடை. இதன் வேகம் பெரிய அளவில் கார்டியோ பலன்களை அளிக்காவிட்டாலும், இயற்கையான நடையுடன் தொடர்புடையது.
2. சாதாரண நடை - போக்குவரத்திற்கு பயன்படும் வழக்கமான நடை.
3. சீரான நடை - மலையேறுதல் போன்றவற்றில் பயன்படும் வேகம் கொண்ட சீரான மிதமான வேகம்.
4. சுறுசுறுப்பான நடை -மிதமான துடிப்பான வேகம் கொண்டது. உடல் தசைகள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும் என்பதால் மிதமான கார்டியோ பயிற்சி ஆகிறது. அதே நேரத்தில் குறுகிய நேரத்தில் நீண்ட தொலைவு செல்லலாம்.
5. மிடுக்கான நடை - கார்டியோ பிட்னசை அதிகரிக்கும் அளவுக்கு துரித வேகம் கொண்டது. உடல் மற்றும் மன நலன் இரண்டும் கொண்டது. இந்த நடை மேற்கொள்பவர்கள் வேகமாக மூச்சிறைப்பதை உணர்ந்து, எண்டோர்பின்ஸ் போன்ற ரசாயனம் வெளிப்பட வழி வகுக்கும். இது வலியை, மன அழுத்தத்தைக் குறைத்து, ஒட்டுமொத்த உடல்நலனை மேம்படுத்தி, உடல் ஆற்றலை அதிகமாக்கி, தீவிர நோய் ஆபத்தைக் குறைக்கிறது.
6. பந்தய நடை - ஒரு சில விதிமுறைகளைப் பின்பற்றும் குறிப்பிட்ட நடை.
7. நார்டிக் நடை - தடகள செயல்பாடு கொண்டது. இந்த நடை உடலின் மேல் மற்றும் கீழ் பகுதி தசைகளில் கவனம் செலுத்தி, உடல் வலுவும், துடிப்பும் பெற உதவுகிறது.
நடைப்பயிற்சியின் ஆரோக்கிய பலன்கள்:
அமெரிக்க இதய சங்கம், ஆரோக்கிய பலன்கள் பெற, பெரியவர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் குறைந்தது 30 நிமிடங்கள், 18 முதல் 60 கிமீ வரை, மிதமானது முதல் தீவிரமாக நடக்க வேண்டும் என பரிந்துரைக்கிறது.
தொடர் நடைப்பயிற்சி, நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற சிண்ட்ரோமை குறைப்பதில் முக்கிய பங்காற்றும் இன்சூலின் உணர்வுத்திறனைப் பராமரிப்பதில் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி:
நடைப்பயிற்சி போன்ற ஏரோபிக் பயிற்சிகள், நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் புரத வெளிப்பாடான சைட்டோகைன்சை மேம்படுத்துவதோடு, ஆஸ்த்துமா மற்றும் மூட்டுவலி பாதிப்பு அபாயத்தைக் குறைக்கிறது. உடலில் உள்ள அழற்சிக்கு எதிரான செல்களின் ஆற்றலை மேம்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகிறது. இது தூக்கத்தை மேம்படுத்தி, கலோரிகளைக் கரைத்து, உடல் எடையைக் கட்டுப்படுத்துகிறது.
நடைப்பயிற்சி போன்ற உடல் செயல்பாடு மூளை ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது. மூளைக்கான இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கவனம், நினைவுத்திறன், பிரச்சினைக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தி, ஒட்டுமொத்த உடல் நலனை உணர வைக்கிறது.
என்ன டாக்டர் சொல்றதைப் படிச்சீங்களா..?
எதையும் வருமுன் காப்பதே புத்திசாலித்தனமானது. நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் காலை, மாலை இரு வேளையும் 30 முதல் 45 நிமிடங்கள் வரையாவது நடக்க வேண்டும். நாம் நடக்க, நடக்க நமக்கு நல்லதே நடக்கும். நம் உடலும் வளம் பெறும்.
நம் வீட்டுக் குழந்தைகள் மத்தியில் நடைப்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கிச் சொல்லி, அவர்களையும் தினமும் நடக்கப் பழக்கப்படுத்துவோம்.
இதனை வலியுறுத்தும் வகையில் வாக்கரூ மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் இணைந்து ‘நடந்தால் நன்மையே நடக்கும்’ எனும் பள்ளிக் குழந்தைகளுக்கான நடைப்பயிற்சி குறித்த விழிப்புணர்வைத் தூண்டும் போட்டிகளை நடத்துகின்றன.
இப்போட்டிகளில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் மட்டுமே பங்கேற்கலாம்.
3, 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான வண்ணம் தீட்டுதல் போட்டி:
மாணவர்களுக்கு தரப்படும் தாளில் வரையப்பட்டுள்ள ஓவியத்திற்கு, மாணவர்கள் அவர்களது கற்பனைக்கேற்ப வண்ணங்களைத் தீட்ட வேண்டும்.
6, 7, 8-ம் வகுப்புகளுக்கான ஜூனியர் கட்டுரைப் போட்டி:
‘நடைப்பயிற்சியின் நன்மைகள்’ எனும் தலைப்பில் 300 சொற்களுக்கு மிகாமல் கட்டுரையை எழுத வேண்டும்.
9 முதல் 12- வகுப்புகளுக்கான சீனியர் கட்டுரைப் போட்டி:
‘நம் வாழ்க்கை முறைகளில் நடையின் பங்கும் பயனும்’ எனும் தலைப்பில் 500 சொற்களுக்கு மிகாமல் கட்டுரையை எழுத வேண்டும்.
இப்போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும்
இ-சான்றிதழ் வழங்கப்படும்.
பள்ளி அளவில் மூன்று பிரிவுகளிலும் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் 9 மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் பரிசும் வழங்கப்படும்.
பள்ளி அளவில் தேர்வான படைப்புகளிலிருந்து மூன்று பிரிவுகளிலும் மாவட்ட அளவில் தலா மூன்று மாணவர்களின் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு (9 X 38) வெற்றிச் சான்றிதழும் பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
வாருங்கள்… அரசுப் பள்ளி மாணவச் செல்வங்களே!
நடையின் பயனை உணர்வோம்; நடப்பதினால் நன்மைகளை அடைவோம்.
அன்றாட வாழ்க்கை முறையில் இனி நடப்பதையும் நம் அன்றாட செயல்களில் ஒன்றாக்கிக் கொள்வோம்.
கூடுதல் விவரங்களுக்கு :
கோவை : 98942 20609 சென்னை : 88385 67089
திருச்சி : 90031 28286 மதுரை : 98409 61866
முக்கிய செய்திகள்
வர்த்தக உலகம்
8 days ago
வர்த்தக உலகம்
11 days ago
வர்த்தக உலகம்
15 days ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
5 months ago
வர்த்தக உலகம்
5 months ago