‘சுத்தம் சுகாதாரம்’ வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் இணைய வழி சுகாதார விழிப்புணர்வுத் தொடர் நிறைவு

By செய்திப்பிரிவு

சென்னை.

டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கிய ‘சுத்தம் சுகாதாரம்’ இணைய வழி சுகாதார விழிப்புணர்வுத் தொடர் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி, ‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தில் ஒளிபரப்பாகி, மார்ச் 16-இல் நிறைவடைந்தது. இந்த சுகாதார தொடர் நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் உடன் இணைந்து முன்னெடுத்தது. இந்த கூட்டமைப்பில் கலெக்ட்டிவ் குட் பவுண்டேஷன், அவ்வை வில்லேஜ் வெல்ஃபர் சொஸைட்டி ஆகியவையும் இணைந்து நடத்தின.

இந்த நிகழ்வில் ‘ஆரோக்கியமாக வாழ…’ எனும் நோக்கில் ‘வளமான வாழ்வுக்கு வழிகாட்டி’ எனும் தலைப்பிலான சுகாதார நடவடிக்கைகள் பற்றிய வீடியோக்கள் 5 தலைப்புகளில், 5 வாரங்களுக்கு, 15 பகுதிகளாக ஒளிபரப்பாகின. நோயுற்ற சமயங்களில் நாம் பின்பற்ற வேண்டிய சுகாதார செயல்பாடுகள், பள்ளிகளில் சுகாதாரம், தனிநபர் சுத்தம், வீடுகளில் சுகாதாரம், சுற்றுப்புற சுகாதாரம் ஆகிய தலைப்புகளில் 30-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இதில் இடம்பெற்றன.

நிகழ்வில் புகழ்பெற்ற குழந்தை நலன் மருத்துவர் ராதாலெட்சுமி செந்தில் பங்கேற்று, பல்வேறு சுகாதார விழிப்புணர்வு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். இந்த தொடர் நிகழ்வு முடிவடைந்தாலும் ‘இந்து தமிழ் திசை’யின் ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தின் https://www.htamil.org/00220 என்ற லிங்க்-இல் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் பார்த்து பயனடையலாம்.
இந்த தொடர் நிகழ்ச்சியை பார்த்த மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் கேள்வியொன்று கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கான பதிலை https://www.htamil.org/ss என்ற லிங்க்-இல் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து, கேட்கப்பட்டுள்ள தகவல்களையும் சேர்த்து வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்புங்கள். எந்தப் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிகளவில் பதிலளிக்கிறார்களோ அந்தப் பள்ளிக்குச் சிறப்புப் பரிசு உண்டு.

இந்த நிகழ்வை நீங்கள் பார்ப்பதோடு, உங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் பார்க்கச் செய்யுங்கள். இதில் கூறபட்டுள்ள எளிய சுகாதார ஆலோசனைகளை அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.


இந்த நிகழ்வின் முந்தைய பகுதிகளை, கீழ்க்கண்ட லிங்க்-இல் பார்க்கலாம்
https://www.hindutamil.in/special/suththamsugaatharam

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE