இடுப்பு பகுதி மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயை கட்டுப்படுத்த உதவும் IGRT மற்றும் ART ரேடியோதெரபி சிகிச்சை முறை

By செய்திப்பிரிவு

40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களை தாக்கக்கூடியது ப்ராஸ்டேட் (சுக்கில சுரப்பி) புற்றுநோய். இதற்கும் இடுப்புப் பகுதியில் ஏற்படக்கூடிய மற்ற புற்றுநோய்களுக்கும் சிறப்பான தீர்வாக இருப்பதுதான் ரேடியோதெரபி சிகிச்சை என்று கூறும் டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை நிபுணரான டாக்டர் J. சுரேந்திரன் இடுப்புப்பகுதி புற்றுநோய்க்கு தீர்வளிக்கும் நவீன லீனியர் ஆக்சிலேட்டரின் செயல்பாட்டை பற்றி கூறியது பின்வருமாறு.

கே: இடுப்புப் பகுதியில் ஏற்படக்கூடிய எந்த வகை புற்று நோய்களுக்கு ரேடியோதெரபி பயன்படுகிறது?

ப: இடுப்புப் பகுதிகளில் ஏற்படக்கூடிய முக்கிய புற்றுநோய்கள் ஆண்களில் ப்ராஸ்டேட் புற்று மற்றும் பெண்களில் கருப்பை வாய் புற்று. இதைத்தவிர மலக்குடல் மற்றும் சிறுநீர்ப்பை புற்று நோய்க்கும் ரேடியோதெரபி பயன்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் அதிகம் வரக்கூடிய ப்ராஸ்டேட் புற்றுநோய் தற்போது நம் நாட்டிலும் அதிகம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

கே: ரேடியோ தெரபி எந்த வகையில் இடுப்புப்பகுதி புற்றுநோய்க்கு முதன்மையான சிகிச்சையாக கருதப்படுகிறது?

ப: ப்ராஸ்டேட் புற்றுநோய் என்பது சற்று நிதானமாக பரவக்கூடிய புற்றுநோயாக இருக்கிறது. அறிகுறிகளில் மாற்றம் இல்லாத நிலையில், பல வருடங்கள் நோயாளிகள் இருக்கின்றனர். அதேபோல் கர்ப்பப்பை புற்று நோயிலும் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் வரையில் கூட புற்றுநோயின் ஆரம்ப கட்டம் இருக்கிறது. இந்த கட்டத்தில் இப் புற்றுநோயை கண்டுபிடிக்கக் கூடிய பரிசோதனைகள் இருப்பதும் அனுகூலமான ஒன்று. எனவே இந்த நிலையில் அதாவது நான்காம் நிலைக்கு (ஸ்டேஜ் 4) முன்புள்ள எல்லா நிலைகளிலும் ப்ராஸ்டேட் மற்றும் கருப்பை வாய் புற்று நோய்களை ரேடியோதெரபி மூலம் முழுமையாக குணப்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு பிராக்கை தெரபி என்ற உட்புறம் ஊடுருவும் கதிர்வீச்சு பயன்படுகிறது.

கே: மலக்குடல் மற்றும் சிறுநீர் பை கட்டிகளுக்கும் ரேடியோதெரபி பயன்படுகிறதா?

ப: ஆம். மலக்குடல் மற்றும் சிறுநீர்ப்பை புற்று நோய்களில் கட்டியை ரேடியோதெரபி மூலம் சுருங்க செய்து பின்பு அறுவை சிகிச்சை மூலம் கட்டியை மட்டுமோ கட்டியுடன் பாதித்த பகுதியின் சிறு பகுதிகளையோ நீக்குவோம். பொதுவாக மலக்குடலின் மேற்பகுதியில் கட்டி இருந்தால் அந்த பகுதியை அகற்றிவிட்டு மேல் பகுதியையும் கீழ் பகுதியையும் இணைத்து விடுவார்கள். கட்டி நடுப்பகுதியிலோ கீழ்ப்பகுதியில் ஆசனவாயின் அருகில் இருந்தால் இந்த முறையில் இணைக்க முடியாது. இதற்கு முன்பெல்லாம் அறுவை சிகிச்சை மூலம் புற்றுக்கட்டியை நீக்கிவிட்டு அடி வயிற்றின் மூலம் மலக்குடலுக்கு ஒரு வழியை உண்டாக்கும் விதத்தில் கொலோஸ்டமி சிகிச்சை செய்யப்படும். ஆனால் தற்போது ஸ்பின்க்டர் ஸ்பேரிங் முறை மூலம் கொலோஸ்டமி தவிர்க்கப்படுகிறது. ரேடியோதெரபி மூலம் கட்டி சுருக்கப் படுவதால் இந்த முறை சாத்தியப்படுகிறது.

கே: இமேஜ் கைடட் ரேடியேஷன் தெரபி (ஐ ஜிஆர்டி) என்றால் என்ன?

ப: ஒரு நோயாளிக்கு ரேடியேஷன் தெரபி தர வேண்டும் என்று முடிவு செய்த பின் அவருக்கு சி டி ஸ்கேன் ஒன்று எடுக்கப்படும். அதில் கட்டியின் அளவு, அதன் அருகில் இருக்கும் உறுப்புக்கள் போன்றவை தெளிவாக தெரிந்துவிடும். இதை வைத்து எவ்வளவு கதிர்வீச்சை அளிக்க வேண்டும் அதை எந்த இடத்திற்கு அளிக்க வேண்டும் என்பதை மிகவும் துல்லியமாக அளந்து விடுவோம். இதை நோயாளிக்கு அளிக்கும் முன்பு சிகிச்சை அறையில் ஸிமுலேஷன் மூலம் ரேடியேஷன் அளவு, சிகிச்சை கொடுக்கப்பட வேண்டிய இடத்தின் பரப்பளவு போன்றவற்றை செயல்படுத்தி அதன் வரைபடத்தையும் தகவல்களையும் வகைப்படுத்தி அதை லீனியர் ஆக்சிலேட்டர் கருவிக்கு அனுப்பி விடுவோம். சிகிச்சை அளிக்கப்படும் நேரத்தில் லீனியர் ஆக்சிலேட்டர் மீண்டும் ஒரு சிடி ஸ்கேன் எடுக்கும். முதலில் அனுப்பப்பட்ட தகவல்களும் தற்போது எடுத்த ஸ்கேன் மூலம் கிடைத்த தகவல்களும் பொருந்தினால் லீனியர் ஆக்சிலேட்டர் துல்லியமாக கணிக்கப்பட்ட கதிர்வீச்சை தேவையான இடத்திற்கு அனுப்பி கட்டியை அகற்றும். சிகிச்சை நேரத்தில் சிடி ஸ்கேன் எடுப்பதற்கு காரணம் அந்த நேரத்தில் மலகுடல் மற்றும் சிறுநீர்ப்பை நிரம்பி இருந்தால் அது கருப்பையையும் புரோஸ்டேட்டையும் அழுத்தி பின்புறமாக தள்ளிவிடலாம். இதனால் உறுப்புகளின் அமைப்பும் அளவும் மாறிவிடலாம். எனவேதான் முதலில் எடுத்த சிடி ஸ்கேனை வைத்து கணித்து தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட ஸ்கேனுடன் ஒப்பிட்டு இரண்டும் பொருந்திய பின்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவே இமேஜ் கைடட் ரேடியேஷன்தெரபி.

கே: அடேப்டிவ் ரேடியேஷன் தெரபி (ART) என்றால் என்ன?

ப: ஒருமுறை ரேடியேஷன் தெரபி கொடுத்த பின்பு கட்டியின் அளவு சுருங்கி விடும். அடுத்த முறை ரேடியேஷன் தெரபி கொடுக்கும்போது அதே பரப்பளவிற்கு கதிர்வீச்சை கொடுத்தால் சுற்றியுள்ள ஆரோக்கியமான செல்கள் பாதிக்கப்படலாம். எனவே தொடர்ந்து அளிக்கும் சிகிச்சையின்போது கதிர்வீச்சின் அளவை கூட்டி அது தாக்கும் பரப்பளவை குறைத்து கட்டியின் தன்மைக்கேற்ப கூட்டியும் குறைத்தும் கொடுக்கப்படுவது அடேப்டிவ் ரேடியேஷன் தெரபி. ஐஜிஆர்டி மற்றும் ஏஆர்டி என்ற இந்த இரண்டு சிகிச்சை முறையின் மூலம் ஸ்டீரியோடாக்டிக் பாடி ரேடியோ தெரபி (SBRT) என்ற சிகிச்சை முறை சாத்தியமாகிறது. SBRT என்பது புற்றுநோய் கட்டியை மட்டும் நுண்மையாக பார்த்து மிகத் துல்லியமான அளவு கதிர்வீச்சு செலுத்தி அழிக்கும் ஒரு சிறப்பு சிகிச்சையாகும்.

கே: டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் உள்ள லீனியர் ஆக்சிலேட்டர் மூலம் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியுமா?

ப: எங்கள் மருத்துவமனையில் நிறுவப்பட்டு உள்ள லீனியர் ஆக்சிலேட்டர் மூலம் மிகவும் சிறப்பான முறையில் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சையை பெரியவர் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக அளிக்க முடியும் என்பதே நற்செய்தி. இமேஜ் கைடட் ரேடியேஷன் தெரபி (IGRT), அடேப்டிவ் ரேடியேஷன் தெரபி (ஆர்ட்), வால்யுமெட்ரிக் மாட்யுலேட்டட் ஆர்க் தெரபி (VMAT), ஸ்டீரியோடாக்டிக் ரேடியோ தெரபி (SRT), ஸ்டீரியோடாக்டிக் பாடி ரேடியோ தெரபி (SBRT) போன்ற நுணுக்கமான தொழில்நுட்பங்கள் மூலம் உடலின் எந்த பகுதியிலும் உள்ள புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிக்க முடியும்.

நம் கேள்விகளுக்கு விடையளித்த டாக்டர்.சுரேந்தர் டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் மூத்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர். புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை வல்லுனரான இவர் இத்துறையில் 25 ஆண்டு அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. புற்றுநோயை கண்டறிவதிலும் அதன் சிகிச்சைக்கும் இந்த வைரஸ் கிருமி தொற்று பரவலின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை குறித்து வரும் வாரத்தில் காண்போம்

மற்ற புற்றுநோய் பற்றிய சந்தேகங்களுக்கு மருத்துவர் சுரேந்திரன் அளித்த பதில்களை படிக்க கீழே கிளிக் செய்யவும்

மூளை புற்றுநோய்

https://www.hindutamil.in/news/brandhub/693409-concentrated-radiation-special-treatment-for-brain-cancer.html

மார்பகப் புற்றுநோய்

https://www.hindutamil.in/news/brandhub/696447-safe-radiation-therapy-for-breast-cancer.html

நுரையீரல் மற்றும் கல்லீரலில் பரவும் புற்றுநோய்

https://www.hindutamil.in/news/brandhub/701103-sophisticated-precision-radiotherapy-treatment-for-cancer-of-the-lungs-and-liver.html

உங்களின் கேள்விகளை kv@drkmh.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

30 days ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

5 months ago

வர்த்தக உலகம்

6 months ago

மேலும்