மூளை புற்றுநோய்க்கான செறிவூட்டிய கதிர்வீச்சு சிறப்பு சிகிச்சைமுறை

By செய்திப்பிரிவு

புற்றுநோய்க்கு பல வகையான சிகிச்சை முறைகள் இருந்தாலும், குணமடைய நீண்ட நாட்கள் ஆகும் என்பதை நோயாளிகளும், மருத்துவர்களும் அறிவர். சிகிச்சை எப்போதும் இரு கட்டங்களை உள்ளடக்கியது; பாதிப்பை ஏற்படுத்திய புற்றுநோய் செல்களை அகற்றுவது, அது மீண்டும் வராமல் தடுப்பது என்பது தான். மூளையை செயலிழக்கச் செய்யும் புற்றுநோய் தான் மிகவும் சிக்கலான ஒன்றாகும். மேலும், மூளை புற்றுநோய் அறிகுறிகள் பற்றியும், அதற்கான நவீனகால சிகிச்சைமுறை குறித்தும் டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் கதிர் வீச்சியல் புற்றுநோய் சிகிச்சை முதுநிலை மருத்துவர் ஜெ. சுரேந்திரன் விவரிக்கிறார்.

Dr.Surendran J
MBBS, MD RT

கேள்வி: யாருக்கு மூளை புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம்?

பதில்: மூளை புற்றுநோய் என்பது குழந்தைகள், வாலிபர்கள், வயோதிகர் வரை அனைத்து வயதினருக்கும் வரலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் சில வகை புற்றுநோய் குணப்படுத்தக் கூடியது. வயதானவர்களுக்கு ஏற்கனவே மார்பகம், நுரையீரல், பெருங்குடல், சிறுநீரகம், விந்துசுரப்பி மற்றும் பிற இடங்களில் புற்றுநோய் ஏற்பட்டு இருந்தால், இரண்டாம் கட்டமாக மூளையில் புற்றுநோய் பரவல் ஏற்பட வாய்ப்பு உண்டு.


கேள்வி: மூளை புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் என்ன?

பதில்: தலைவலி, வாந்தி, நிலையின்மை, வலிப்பு, துாக்கமின்மை, கை, கால் தசைகளில் தளர்ச்சி மற்றும் பார்வையிழப்பும் ஏற்படலாம். நீண்ட நாட்களாக இந்த அறிகுறிகள் இருக்கும். இவை ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். மேற்குறிப்பிட்ட அறிகுறிகளுக்கு உரிய பிரச்சனை இல்லையெனில், அடுத்த கட்டமாக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

கேள்வி: எவ்வாறு மூளையில் உள்ள புற்றுநோய் கண்டறியப்படுகிறது?

கம்ப்யுட்டர் முறையில் படங்கள் எடுக்கப்படும் முறை வருவதற்கு முன், மூளையில் புற்றுநோய் மற்றும் பிற இடங்களில் இருப்பதையும் கண்டறிவது, (புற்றுநோய் பரவுதல், நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற) போதுமானதாக இல்லை.

மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 40 % பேருக்கு மூளை புற்றுநோய் பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது. சரியான, துல்லியமான மூளை புற்றுநோய்க்கான சிகிச்சை, சவால் மிகுந்ததாகவும், கடினமான வேலையாகவும் இருந்தது. சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ போன்றவை அறிமுகமான பிறகு, எளிதாக கட்டிகள் கண்டறியப்பட்டது. துல்லியமான முறையில் வரையறை செய்யப்பட்டு, அதன்மீது திறம்பட சிகிச்சை அளிக்க முடிகிறது. மூளை புற்றுநோய் பரவல் இருப்பவர்களுக்கு உரிய நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்காவிடில் அவர்களின் வாழும் காலம் குறைவதற்கு வாய்ப்புள்ளது.

கேள்வி: மூளையில் பரவும் புற்றுநோய்க்கு எஸ்ஆர்டி சிகிச்சை சிறப்பானது என்பதை எது எடுத்துக் காட்டுகிறது?

பதில்: மூளையில் பரவும் புற்றுநோய், அது ஏற்பட்டுள்ள பகுதி, அளவு, மற்றும் பரவியுள்ள பகுதி போன்ற காரணிகள் தான் நோயாளிகளின் வாழ்நாள் மற்றும் பிழைப்பதற்கான வாய்ப்பை நிர்ணயிக்கிறது. நோயாளியின் நிலைமை மற்றும் விருப்பத்தைப் பொறுத்து எஸ்.ஆர்.டி கதிர்வீச்சியல் சிகிச்சை முறை, கதிர் வீச்சை மேம்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதியில் அதிவேகமாகவும், மிகத் துல்லியமாகவும், அதிக திறனோடும் மிக குறுகிய காலத்தில் செலுத்தி நோய் குணமாக்கும் சூழ்நிலையை உருவாக்குகிறது. இந்த சிகிச்சைமுறை புற்றுநோயின் விஷத் தன்மையை குறைத்து, புற்றுநோய் அல்லாத செல்களை கதிர் வீச்சிலிருந்து பாதுகாக்கிறது. மார்பக புற்றுநோய், நுரையீரல், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய்க்கு சரியான சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகளுக்கு 4, 5 ஆண்டுகளுக்கு பின், மூளையில் புற்றுநோய் பரவும் வாய்ப்புகள் உண்டு. முன்பெல்லாம் இது மோசமான பாதிப்பாக இருந்தது. ஆரம்ப கட்டத்திலேயே இதை கண்டுபிடித்து விட்டோம் எனில், உடனடியாக சிகிச்சை அளிக்க முடியும். எஸ்ஆர்டி வாழ்க்கைக்கு இரண்டாவது வாய்ப்பளிக்கிறது.

கேள்வி: டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் எஸ்ஆர்டி சிகிச்சை உண்டா?

பதில்; டாக்டர் காமட்சி நினைவு மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. மிக விரைவில் இங்கு லீனியர் ஆக்சிலரேட்டர் கருவி நிறுவப்படும். இது அறுவை சிகிச்சை இல்லாத சிகிச்சை முறையை மேற்கொள்ள உதவும் . இந்த லீனியர் ஆக்சிலரேட்டர் கருவி மூளையில் நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படாமல் சிகிச்சை அளிக்கவும் , தரமான வாழ்க்கைக்கும் வாழ்நாள் நீட்டிப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கேள்வி: குழந்தைகளுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டால், கதிர் வீச்சு சிகிச்சை பயனுள்ளதாக இருக்குமா?

பதில்: ஆம், கதிவீச்சியல் சிகிச்சை குழந்தைகளின் புற்றுநோயை குணப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகளுக்கு பெரும்பாலும் கீமோதெரபி சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் சில மூளைக்கட்டிகள் கீமாதெரபியுடன் ரேடியோதெரபி சிகிச்சையையும் சேர்த்து அளிப்பதால், முற்றிலுமாக குணமாக்க முடியும். நோயின் பரவலை கட்டுப்படுத்துகிறோமா அல்லது ஆரோக்கியமான பாதிக்கப்படாத திசுக்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றுகிறோமா என்பது தான் இந்த சிகிச்சையில் இருக்கும் சவாலான பணியாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு மூளைப்பகுதியில் மென்மையாக உள்ள திசுக்களுக்கு தண்டுவடம் வழியாக செலுத்தப்படும் கதிர்வீச்சு சிகிச்சை மிகவும் துல்லியமாக மேற்கொள்ளப்படும். இந்த விஎம்ஏடி முறையில் துல்லியமாக அளவான கதிர்வீச்சு கட்டிக்குள் செலுத்தப்படும், மேலும் சுற்றிலும் உள்ள செல்கள் பாதிக்காதவாறு பாதுகாக்கப்படும். டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான புற்றுநோய்க்கு உயர்தரமான நவீன சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் முதன்மை கதிர்வீச்சியல் முதுநிலை மருத்துவர் சுரேந்திரன், புற்றுநோய் சிகிச்சையில் 25 ஆண்டுகால அனுபவமிக்கவர். மார்பக புற்றுநோயின் அடிப்படை காரணிகள் மற்றும் புற்றுநோய் மீது கதிர்வீச்சியல் சிகிச்சைமுறை நோயை குணப்படுத்த எவ்வளவு திறம்பட செயல்பட உதவுகிறது என்பதை வரும் வாரங்களில் விளக்குவார்.

கதிர்வீச்சியல் பற்றிய உங்களது சந்தேகங்களையும் விசாரணைகளையும் மின்னஞ்சலில் kv@drkmh.com அனுப்புங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

27 days ago

வர்த்தக உலகம்

30 days ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

5 months ago

வர்த்தக உலகம்

5 months ago

மேலும்