நன்றி திரு & திருமதி குமார்

By செய்திப்பிரிவு

நாம் அன்றாட தினசரி வாழ்க்கையில் பிறருக்கு பல வழிகளில் உதவிடும் மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்கள் எந்தவித எதிர்பலனையும் பாராது அந்த உதவியைச் செய்துவருவதை கவனித்திருப்போம். அரசு மருத்துவ மனையில் தினந்தோறும் 300 பேருக்கு இலவச மதிய உணவு அளித்துவரும் தம்பதியினர். இப்படி எளிய மக்களுக்காக தனது உதவிக்கரங்களை நீட்டியவருக்கு ‘காட்பரி டெய்ரி மில்க்’ நன்றி கூற விரும்புகிறது. அது அவர்களின் சேவைப் பயணத்தை இன்னும் சுகமாக்கும், வலுப்படுத்தும்...

கரோனா அடையாளங்காட்டிய மனிதநேயர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தினந்தோறும் 300 பேருக்கு மதிய உணவு அளிக்கும் தம்பதி உலகம் முழுவதும் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், மனிதநேயத்தை உயர்த்திப் பிடிக்கின்ற பண்பாளர்களையும் நமக்கு அடையாளங்காட்டி வருகின்றது.

‘சகமனிதன் உயிருக்காகவும், உணவுக் காகவும் போராடிவரும் நிலையில் அவர்களின் பசியைப் போக்கி, உயிர் காக்க உதவுகின்ற பெருந்தொண்டு கடவுள் வழிபாட்டை விட சிறந்தது’ என்பார்கள். அத்தைகய செயலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் வளாகத்தில் செய்து வருகிறது ஒரு தம்பதி. திருவாரூர் வாளவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.வி.குமார்.

இவரின் மனைவி நதியா. இருவரும் நாட்டுப்புற இசைக் கலைஞகள். வள்ளலார்மீது கொண்ட பற்றால் ஆதரவற்றவர்களின் பசியைப் போக்க,
கடந்த ஒரு வருடமாக தங்களது வருமானத்தின் ஒருபகுதியில் இருவரும் இலவசஉணவு வழங்கி வருகின்றனர்.

தற்போது ஊரடங்கு காரணமாக நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்பில்லாத சூழலிலும், தங்கள் சேமிப்புப் பணத்தில் இருந்து உணவு வழங்கும் பணியை தொய்வின்றி செய்கின்றனர். ஊரடங்கு காலகட்டத்தில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகளுடன் வந்த உறவினர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் மதியம் 12 மணிக்கு சாம்பார், ரசம், மோர், கூட்டு,பொரியல் சேர்த்து அறுசுவை உணவு வழங்கும் இந்தப் பணி, அப்பகுதி மக்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

இவர்கள் வழங்கும் உணவை மருத்து வமனை நோயாளிகள், புறநோயாளிகள், நோயாளிகளுடன் தங்கியிருப்போர் மட்டுமின்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் ஏழை மக்களும் மிகுந்த நன்றியுணர்வோடு வாங்கிச் சாப்பிட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து இலவசமாக உணவு வழங்கிவரும் குமார் கூறியதாவது:


“நான் 10-ஆம் வகுப்பு படிக்கும்போதே வள்ளலார் வழிபாட்டில் கொண்ட பற்றால், ஏழைகளுக்கு உணவு வழங்கும் பணியைச் செய்யும் ஆர்வம் உண்டானது. திருமணத்துக்குப் பிறகு, எனது மனைவி நதியாவும் ஒத்துழைப்பு வழங்கிய நிலையில் கடந்த ஒருவருடத்துக்கும் மேலாக அரசு மருத்துவமனையில் ஏழை, எளிய மக்களுக்கு உணவளிப்பதைத் தொடங்கிய எங்களுக்கு, இவ்வளவு நாள் உணவளிக்கும்போது இல்லாத மன நிம்மதி, தற்போதைய கரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் பணியை செய்யும்போது ஏற்பட்டுள்ளது. பசித்த வயிற்றுக்கு சோறு படைத்து, அவர்களது பொருளாதார நெருக்கடிக்கும் சிறியளவில் உதவி செய்துள்ளதாக உணர்கின்றோம்.

இதனை அறிந்த பலரும், எங்களுக்கு நிதி உதவி அளித்து, செலவுகளைஏற்க முன்வருவது மேலும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. எங்கள் உயிர் இருக்கும்வரை நாங்கள் ஏழைகளுக்கு உணவளித்துக்கொண்டே இருக்க வேண்டும்…” என்றார் உறுதியான குரலில்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

8 days ago

வர்த்தக உலகம்

11 days ago

வர்த்தக உலகம்

15 days ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

5 months ago

வர்த்தக உலகம்

5 months ago

மேலும்