மதுரையில் ‘சாந்தாஸ் சில்க்ஸ்’ திறப்பு

By செய்திப்பிரிவு

மதுரை கே.கே.நகர் 80 அடி சாலை ‘தி இந்து’ நாளிதழ் அலுவலக வளாகத்தில் ஜெயபிரபா ஜூவல்லர்ஸ் குழுமம் சார்பில் பெண்களுக்கான பிரத்யேக பட்டு மாளிகை ‘சாந்தாஸ் சில்க்ஸ்’ தொடங்கப்பட்டுள்ளது. நிறுவன இயக்குநர்கள் பிரபாகரன், தனசேகரன், சங்கரதேவி, டாக்டர் நிவேதிதா ஆகியோர் வரவேற்றனர்.

அருப்புகோட்டை ஜெயவிலாஸ் கோவிந்தராஜ் மில்ஸ் உரிமையாளர் வரதராஜ் மனைவி செண்பகாதேவி, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் மனைவி ஆதிலெட்சுமி ஆகியோர் சாந்தாஸ் சி்ல்க்ஸை திறந்து வைத்தனர். தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, மதுரை மேயர் இந்திராணி மற்றும் மணிமேகலை, சுமதி, சரளா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

மதுரை ஜெயவிலாஸ் (ஹீரோ) உரிமையாளர் பாபு, அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் உரிமையாளர் கார்த்திகேயன் ஆகியோர் முதல் பட்டுச்சேலை விற்பனையைத் தொடங்கி வைத்தனர். அதை மதுரை ஜெய்ஹிந்த்புரம் நந்தினி நர்சிங் ஹோம் டாக்டர் சுஜாதா பெற்றுக் கொண்டார்.

அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, உதயகுமார், முன்னாள் துணை மேயர் திரவியம், ஜெயவிலாஸ் மில்ஸ் மேலாளர் கோபால் தினகரன், ஜெயவிலாஸ் உரிமையாளர் விஜயராமன், விருதுநகர் திருவேங்கடம் மருத்துவமனை சுப்பாராஜ், மதுரை ஆர்பிபி பெயின்ட்ஸ் பாலகிருஷ்ணன், கேஜிஎஸ் ஸ்கேன்ஸ் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், ‘தி இந்து’ தலைமை நிதி அலுவலர் நம்பிராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

பாரம்பரியம், கலை நுட்பத்துடன் உயர் தரத்தில் புதுவிதமாக தனித்துவமிக்க ஜரிகை, பார்டர் வடிவமைப்புடன் கூடிய பட்டுப்புடவைகள் உள்ளன. காஞ்சிப் பட்டு முதல் நவீன பட்டு வரை புதிய வடிவங்களில் கிடைக்கிறது. திறப்பு விழாச் சலுகையாக செப்.12 வரை 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது என ‘சாந்தாஸ் சில்க்ஸ்’ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE