‘நம்ம ஊரு நம்ம கெத்து’ - 92.7 BIG FM-ன் முயற்சி

By செய்திப்பிரிவு

‘நம்ம ஊரு நம்ம கெத்து’ - 92.7 BIG FM சென்னை மக்களுக்காக, Poorvika Appliances, Vooki eco friendly cleaning products, Greater Chennai Corporation மற்றும் Urbaser Sumeet உடன் கைகோர்த்து சென்னையை பசுமையாகவும், சுத்தமாகவும் மாற்றி அமைக்க உருவான ஒரு விழிப்புணர்வுதான் ‘நம்ம ஊரு நம்ம கெத்து’ - ஒன்று சேர்வோம் வென்று காட்டுவோம் என்பதே இதன் அடிப்படை நோக்கம் .

சென்னையோட சுற்றுப்புற சூழலை மக்களாகிய நாம எல்லாரும் ஒன்று சேர்ந்து பாதுகாக்கணும். நம் முன்னோர்கள் எப்படி இயற்கை மேல் அக்கறை காட்டி பாதுகாத்து அதை நமக்கு விட்டு சென்றார்களோ அதேபோல் நாமும் நம் வருங்கால சந்ததியினரை மனதில் வைத்து இயற்கையை பாதுகாக்க வேண்டும். இதில் தனி மனித ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

‘நம் குப்பை நம் பொறுப்பு’ என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து போடுவதால் நிலப்பரப்பை நம்மால் பாதுக்காக்க முடியும். இதை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க 92.7 BIG FM - Radio-வில் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, Best practices.. reduce reuse recycle.. சுற்றுப்புற சூழல் ஆர்வலர்களிடம் கலந்துரையாடல், இசையின் மூலம் மற்றும் குடியிருப்புவாசிகள் சங்கம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.

பொது சுவர்களில், சுரங்கப்பாதை சுவர்களில், பள்ளிக்கூட சுவர்களில் சமூக பொறுப்புணர்வு சம்மந்தப்பட்ட விழிப்புணர்வு ஓவியங்கள் வரைதல், இன்னும் பல மக்களுக்கு இந்த விழிப்புணர்வு சென்றடைய குழந்தைகளை விளம்பர தூதுவர்களாக ஆக்குதல், குழந்தைகளுக்கு கல்வி சார்ந்த உதவிகள் செய்தல், அவர்களின் சமுதாய கூடங்களை அழகுபடுத்துதல், கழிவறை கட்டுதல், சுற்றுப்புற சூழலை பாதுகாக்க மரங்கள் செடிகளை ஊன்றி, அவ்விடத்தை பசுமையாக்குதல் என பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.

92.7 BIG FM - 2007-இல் உருவான காலத்தில் இருந்து இது போன்ற பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். 92.7 BIG FM எப்பொழுதும் பொழுபோக்கு மட்டுமல்லாது, சமூகத்தின் மேலும் அக்கறையும் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதற்கு சான்றாக 2017 சென்னையின் புறநகர் பகுதிகளில் 3 கிராமங்களை கண்டறிந்து அங்கே பொது வெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் தடுப்பதற்காக 100 கழிப்பறைகளை கட்டி கொடுத்துள்ளனர். Radio வரலாற்றில் எந்த ஒரு நிறுவனமும் செய்யாத இந்த சாதனையை நினைத்து 92.7 BIG FM Tamil பெருமை கொள்கிறது.

92.7 BIG FM - 100 கழிவறைகளை கட்டி கொடுப்பது என்று முடிவெடுத்த பொழுது, அவர்களுடன் முதலில் கைகோர்த்தவர்கள் ‘ Poorvika’ நிறுவனம். அதேபோல் இப்பொழுது ‘நம்ம ஊரு நம்ம கெத்து’-க்காகவும் அவர்கள் தங்கள் ஆதரவை 92.7 BIG FM-க்கு வழங்குகிறார்கள். மேலும் green chemistry முறையில் Eco Friendly கிளீனிங் பொருட்கள் வழங்கும் ‘Vooki’ நிறுவனமும் இந்த நிகழ்வில் பங்கெடுத்துள்ளார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

நம்ம ஊரு நம்ம கெத்து - ஒன்று சேர்வோம் வென்று காட்டுவோம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

5 months ago

வர்த்தக உலகம்

6 months ago

வர்த்தக உலகம்

6 months ago

வர்த்தக உலகம்

6 months ago

மேலும்