சென்னை: பிளஸ் 2 படித்துவிட்டு, அடுத்து என்ன படிப்பது, எங்கே படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகள் மாணவர்களுக்கு எழும். அத்தகைய மாணவ - மாணவியர்களுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ’உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் ஆன்லைன் தொடர் நிகழ்வின் 13-வது, 14-வது பகுதிகள் நாளை (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கும், மாலை 6 மணிக்கும், 15-வது பகுதி ஞாயிறு மதியம் 2 மணிக்கும், நிறைவுப் பகுதி ஞாயிறு மாலை 6 மணிக்கும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் காலேஜ், சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியன இணைந்து வழங்குகின்றன.
நாளை (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ள 13-வது பகுதியில் ‘நர்சிங் & பாரா மெடிக்கல் படிப்புகள் மற்றும் வாய்ப்புகள்’ எனும் தலைப்பில், திருச்சி எஸ்ஆர்எம் கேம்பஸ் டெபுடி டைரக்டர் டாக்டர் என்.பாலசுப்ரமணியன், கோவை PSGIMSR டைரக்டர் ரிசர்ச் அண்ட் இன்னோவேஷன் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் டாக்டர் சுதா ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.
நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள 14-வது பகுதியில் ‘சிவில் & ஆர்கிடெக்ஷர் துறையிலுள்ள படிப்புகள் மற்றும் வாய்ப்புகள்’ எனும் தலைப்பில், சவீதா இன்ஜினீயரிங் கல்லூரியின் சிவில் இன்ஜினீயரிங் துறைத் தலைவர் எம்.கல்பனா, சென்னை CSIR – SERC டைரக்டர் டாக்டர் என்.ஆனந்தவள்ளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.
நாளை மறுநாள் (ஞாயிறு) மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ள 15-வது பகுதியில் ‘ஏரோபேஸ் & ட்ரோன்ஸ்: கல்வி வாய்ப்புகள்’ எனும் தலைப்பில், ஐஐடி கான்பூர் ஏரோபேஸ் இன்ஜினீயரிங் துறை பேராசிரியர் சதீஷ் மாரியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
நாளை மறுநாள் (ஞாயிறு) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வின் நிறைவுப் பகுதியில் ISRO மேனாள் இயக்குநர் பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்துரை ஆற்றுகின்றார். இந்த இரு நிகழ்வையும் ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து நடத்துகிறார்.
இந்நிகழ்வில் பிளஸ் 2 முடித்த பிறகு படிக்க வேண்டிய பலவகையான படிப்புகள், அதற்கான நுழைவுத்தேர்வுகள், கல்விக்கட்டணம், உதவித்தொகை பெறும் வழிமுறைகள், துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. நிகழ்வின் நிறைவாக மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் வல்லுநர்கள் பதிலளிக்க உள்ளனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணமேதுமில்லை. பங்கேற்க விரும்புபவர்கள், https://www.htamil.org/UUK006 என்ற லிங்கில் அல்லது இத்துடன் உள்ள QR Code மூலமாகப் பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். முதலில் பதிவுசெய்யும் 20 மாணவர்களுக்கு பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை, டாக்டர் வி.டில்லிபாபு இணைந்து எழுதிய ‘இந்தியா 75’ எனும் நூல் பரிசாக வழங்கப்படும்.
முக்கிய செய்திகள்
வர்த்தக உலகம்
4 days ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
5 months ago
வர்த்தக உலகம்
5 months ago
வர்த்தக உலகம்
7 months ago