விஐடி பல்கலைக்கழகம் வழங்கும் - `இந்து தமிழ் திசை நாளைய விஞ்ஞானி’ அறிவியல் திருவிழா: மாணவர்கள் பதிவு செய்ய நாளை கடைசி நாள்

By செய்திப்பிரிவு

சென்னை: வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப்டெக்னாலஜி (விஐடி) சார்பில், ‘இந்து தமிழ் திசை - நாளைய விஞ்ஞானி 2023’ என்ற, இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதற்கான அறிவியல் திருவிழா நிகழ்வு நடைபெற உள்ளது. மாணவர்களின் அறிவியல் திறனை வெளிக்கொணரும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்வில் பங்கேற்க, மாணவர்கள் தாங்கள் வாழும் பகுதியில் நிலவும் ஏதேனும் ஒரு பிரச்சினையை அடையாளம் கண்டு, அதற்கான காரணங்களை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்வதுடன், அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி அந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது குறித்து ஒரு பக்க அளவில் சுருக்கமாக எழுதி அனுப்ப வேண்டும்.

இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்துப் பள்ளிகளின் (அரசுப் பள்ளி /மெட்ரிக் பள்ளி / சிபிஎஸ்சி பள்ளி) மாணவ, மாணவிகளும் பங்கேற்கலாம். 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் ஜூனியர் பிரிவிலும், 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் டிச. 15-ம் தேதிக்குள் (நாளை) பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த அறிவியல் திருவிழாவில். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எல்லையில்லா பொறியாளர்கள் – இந்தியா (பெங்களூரு பிரிவு) ஆகியவை இணைந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு, மதுரை மண்டலம் எஸ்.டி.பாலகிருஷ்ணன் 94436 68881 ,கோவை மண்டலம் எம்.தியாகராஜன் 94880 54683, திருச்சி மண்டலம் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன் 94867 66565, சென்னை மண்டலம் எல்.நாராயணசாமி 99440 52435 ஆகிய மண்டல வாரியான தமிழ்நாடு அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

ஆய்வை பதிவு செய்ய.... ‘இந்து தமிழ் திசை - நாளைய விஞ்ஞானி 2023’ அறிவியல் திருவிழாவில் பங்கேற்க விரும்புவோர், https://www.htamil.org/NV2023 என்ற லிங்க்-ல்அல்லது இத்துடன் உள்ளக்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து, தங்களது ஆய்வைபதிவு செய்யலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

27 days ago

வர்த்தக உலகம்

30 days ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

5 months ago

வர்த்தக உலகம்

5 months ago

மேலும்