சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், இளங்கலை, முதுகலை பயிலும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் நாட்டுக்கு சேவைபுரியும் வகையில் பல்வேறு அரசுத்துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளை அறியும் நோக்கிலும், மருத்துவம், பொறியியல், சட்டம், கட்டிடக் கலையில் உயர்கல்வி தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையிலும் விஐடி சென்னை வளாகம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’எனும் இணைய வழி வெபினார் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணிக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்துள்ளது.
வரும் 25-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள வெபினாரில், இந்திய துணைபுள்ளியியல் துறையின் முன்னாள் அலுவலர் பூமிநாதன் ‘இந்திய பொருளாதார சேவை, இந்திய புள்ளியியல் சேவை, யுபிஎஸ்சி-சிஎஸ்இ தேர்வுகள் மற்றும் வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.
வரும் 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள வெபினாரில், சென்னை விஐடி ஸ்கூல் ஆஃப் லா சீனியர் அசோசியேட் புரொஃபசர் டாக்டர் பி.ஆர்.எல்.ராஜாவெங்கடேசன் ‘CLAT மற்றும் சட்டக் கல்வியில் வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.
» தி.மலை மகா தேரோட்டத்தில் மின்சாரம் தாக்கி 25 பக்தர்கள் காயம்
» “தி.மலை மின்கசிவு விபத்து... திமுக அரசு நிர்வாகத்தின் தோல்வி” - இபிஎஸ் சாடல்
இந்த இரு வெபினார் நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து, ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு கலந்துரையாட உள்ளார்.
முக்கிய செய்திகள்
வர்த்தக உலகம்
27 days ago
வர்த்தக உலகம்
30 days ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
5 months ago
வர்த்தக உலகம்
5 months ago