கால் மற்றும் கணுக்கால் அறுவை சிகிச்சையில் பெரும் சாதனையை படைத்துள்ளது  பார்வதி மருத்துவமனையின் கால் மற்றும் கணுக்கால்  இன்ஸ்டிடியூட் 

By Sponsored Content

ஆர்த்தோவுக்கு பெயர் போன பார்வதி பல்நோக்கு மருத்துவமனையின் பிரத்தியேக கால் மற்றும் கணுக்கால் இன்ஸ்டிடியூட் 2000 க்கும் மேற்பட்ட அரிதான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமான செய்து அசத்தியுள்ளது.

டாக்டர் ஜே. தர்மராஜன் தலைமையில் இயங்கி வரும் கால் மற்றும் கணுக்கால் பிரிவான இது 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இன்ஸ்டிடியூட், காம்ப்லெக்ஸ் ட்ராமா மற்றும் இதர சிக்கலான அறுவை சிகிச்சைகள் கையால்வதிலும், ஹால்ஸ் வல்கேஸ், கால் சிதைவு மற்றும் இதர பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பெயர் பெற்றது. நோயாளிகளின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிப்பதிலும், நீரிழிவு மற்றும் கால் புண் பிரச்சினைகள், தட்டையான பாதம், ஹாலஸ் வால்கஸ், வார்ஸ் சிதைவு, கால் தசைநார்கள் மற்றும் பிற சிதைவு குறைபாடுகளை சரிசெய்வதிலும் இந்த இன்ஸ்டிடியூட் சிறந்தது.

கால் மற்றும் கணுக்கால் இன்ஸ்டிட்யூட்டின் நிறுவனரும் , தலைவருமான டாக்டர். ஜே. தர்மராஜன், எலும்பியல் அறுவை சிகிச்சைத் துறையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். அவர் கால் மற்றும் கணுக்காலில் ஏற்பட்ட காயம், ஆர்த்ரோஸ்கோபி மற்றும் காலில் ஏற்பட்டுள்ள குறைபாடு திருத்தம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.

இந்த குறிப்பிடத்தக்க சாதனை குறித்து பார்வதி மருத்துவமனையின் தலைவர், டாக்டர் S முத்துக்குமார் கூறுகையில், “கால் மற்றும் கணுக்கால் பகுதி மனித உடலில் ஒரு முக்கிய பகுதியாகும். இதை பெரும்பாலும் கவனிக்காமல், அதன் சமநிலை, இயக்கம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பராமரிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருத்தல் பெரும் பிரச்சனைக்கு வழிவகுக்கும். இந்த பகுதிகளில் காயங்கள் அல்லது இதர பாதிப்புகள் ஏற்படும் போது, அதன் விளைவுகள் ஒரு நபரின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும், மற்றும் அவரை பலவீனமடைய செய்யும் ."

டாக்டர் முத்துக்குமார் மேலும் கூறுகையில், “பார்வதி பல்நோக்கு மருத்துவமனையின் கால் மற்றும் கணுக்கால் இன்ஸ்டிடியூட், இந்த உடல் உறுப்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து நோயாளிகள் நிறைவான வாழ்க்கை வாழ உறுதிசெய்யும் சிறப்புப் சிகிச்சைகளை முழு அர்ப்பணிப்புடன் கொடுத்துவருகிறது . கால் மற்றும் கணுக்கால் சிகிச்சை அளிப்பதில் டாக்டர் தர்மராஜனின் பங்கு மிக முக்கியமானது. 2000க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை உயர் மருத்துவ தரத்தோடு, 99.97% வெற்றி விகிதத்துடன் செய்துள்ளது கால் மற்றும் கணுக்கால் நிறுவனம்.”

டாக்டர் ஜே தர்மராஜன்
Director of Orthopaedics,
பார்வதி பல்நோக்கு மருத்துவமனை

ஆசியா பசிபிக் எலும்பியல் சங்கம் (ஏபிஓஏ) மற்றும் தமிழ்நாடு எலும்பியல் சங்கம் (டிஎன்ஓஏ) போன்ற மதிப்புமிக்க எலும்பியல் சங்கங்களில் டாக்டர் தர்மராஜன் சிறப்புரைகளை ஆற்றியுள்ளார். கால் மற்றும் கணுக்கால் அறுவை சிகிச்சைத் துறையை முன்னேற்றுவதிலும், அதை சார்ந்த ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுவதிலும் அவரது அர்ப்பணிப்பு மிகப்பெரியது . 2019 ஆம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட்ட தேசிய கால் மற்றும் கணுக்கால் உச்சிமாநாட்டின் (NFAS) அமைப்புச் செயலாளராக டாக்டர் தர்மராஜன் இருந்தவர்.

மேலும், டாக்டர் தர்மராஜன் 50 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச ஆர்த்தோ சார்ந்த கூட்டமைப்புகளில் உரையாற்றியுள்ளார் . ஆர்த்தோ உலகில் புதுமையான நுட்பங்கள் கையாள்வது மற்றும் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், டாக்டர் தர்மராஜன் அடுத்த தலைமுறை கால் மற்றும் கணுக்கால் அறுவை சிகிச்சை நிபுணர்களை உருவாக்கி வருகிறார்.

மேலும் தகவல்களுக்கு, www.parvathyhospital.com என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும். மேலும், கால் மற்றும் கணுக்கால் நிபுணரை சந்திக்க முன்பதிவுக்கு - 044 2238 2248 ஐ அழைக்கவும் | 044 2221 1111

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE