சென்னை: கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, என்எல்சி இந்தியா நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்காக நடத்திய விநாடி-வினா போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்ற அணிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியில் 5 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகள் ஜூனியர் பிரிவிலும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும்மாணவ, மாணவிகள் சீனியர் பிரிவிலும் பங்கேற்றனர். சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெய்வேலி என 5 மண்டலங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
சென்னை அடையாறில் உள்ளபாட்ரிஷியன் காலேஜ் ஆஃப் ஆர்ட் அண்ட் சயின்ஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்ற சென்னை மண்டல அளவிலான விநாடி-வினாபோட்டியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
» கர்நாடக அரசு பள்ளிகளுக்கு இலவச குடிநீர், மின்சாரம்: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
» தொடர்ந்து 3-வது முறையாக முதல்வர் ஆக வேண்டி ராஜசியாமள யாகம் தொடங்கினார் சந்திரசேகர ராவ்
சீனியர் பிரிவில் கே.கே.நகர்பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி11-ம் வகுப்பு மாணவர்கள் ஆர்.ஷ்யாம் சுந்தர், அர்ஜுன் வைத்யநாதன் முதலிடம் பிடித்தனர். மேலும், நேஷனல் பப்ளிக் ஸ்கூல் 12-ம் வகுப்பு மாணவர்கள் ரிஷப் அனுராம் மொஜிலி, டி.எஸ்.பிரணவ், கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி 10-ம் வகுப்பு மாணவர்கள் ஆன்டோனிட்டா அக்ஷயா சுரேஷ், கே.எல்.தீராஜ், ரங்கநாதன் மான்ட்போர்ட் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் 11-ம் வகுப்பு மாணவர்கள் கே.சசிகரன், வி.ஆர்.சுஜன், எஸ்ஜேஎன்எஸ் ஜெயின் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் 10-ம் வகுப்பு மாணவர் என்.உமர் முனூஸ், 12-ம்வகுப்பு மாணவர் பி.அனுருத் ஜெகன்நாத், அரும்பாக்கம் அரசு மாதிரி மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் 11-ம் வகுப்பு மாணவர்கள் ஜெ.முகமது பஸல், பி.பிரதீப் குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஜூனியர் பிரிவில் கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் வி.ஆர்.அஷுதோஷ் வித்யாஷங்கர், 7-ம் வகுப்பு மாணவர் ரமேஷ் எஸ்.கிருஷ்ணா முதலிடம் பிடித்தனர்.
மேலும், செயின்ட் மைக்கேல்ஸ் அகாடமி 8-ம் வகுப்பு மாணவர்கள் ஏ.எஸ்.ஆன்டன் விஜய், எஸ்.அலன் சாமுவேல், பெரம்பூர் கேஆர்எம் பப்ளிக் ஸ்கூல் (சிபிஎஸ்சி) 8-ம் வகுப்பு மாணவர்கள் ஆர்.என்.ஸ்பந்தனா, ஆர்.என்.மிர்துன், கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி 7-ம் வகுப்பு மாணவர்கள் ஆர்.அச்சுதன், எஸ்.எஸ்.தேவ்ரித், பெரம்பூர் கேஆர்எம் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் 8-ம் வகுப்பு மாணவர்கள் வி.சி.அர்விந்த், எஸ்.சஞ்சய்ராஜ், வானகரம் வேலம்மாள் வித்யாலயா 8-ம் வகுப்பு மாணவர்கள் டி.கெளசிக், பி.வேதஷ் ரோஹன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
சீனியர், ஜூனியர் பிரிவுகளில் முதலிடம் பெற்ற இரு அணிகள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளன. போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சென்னை என்எல்சி நிறுவன துணைப் பொதுமேலாளர் ராகவன்னிவாசன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தலைமை இயக்ககஅலுவலர் ஷங்கர் வி.சுப்பிரமணியம், பொதுமேலாளர் டி.ராஜ்குமார், விளம்பரப் பிரிவு பொதுமேலாளர் வி.சிவகுமார், விநியோகப் பிரிவு துணை மேலாளர் மேலாளர் எஸ்.பிரசன்னா, விநியோகப் பிரிவு உதவி மேலாளர் முகமது முஸ்டாக் ஆகியோர் பரிசு வழங்கினர். விநாடி-வினா போட்டியை எக்ஸ்குவிஸ்இட் க்விஸ் மாஸ்டர் ஆர்.அரவிந்த், ஸ்வரண் ஆகியோர் நடத்தினர்.
முக்கிய செய்திகள்
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
6 months ago
வர்த்தக உலகம்
6 months ago