என்எல்சி இந்தியா, ‘இந்து தமிழ் திசை' சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விநாடி - வினா போட்டி: இன்று நேரில் பதிவுசெய்து பங்கேற்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசின் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்-2023ஐ முன்னிட்டு, ‘என்எல்சி இந்தியா நிறுவனம்’ மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விநாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது. இதில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாண விகள் அனைவரும் பங்கேற்கலாம்.

இந்த விநாடி-வினா போட்டியில் 5 முதல் 8-ம்வகுப்பு மாணவ, மாணவிகள் ஜூனியர் பிரிவிலும்,9 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம். சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெய்வேலி என 5 மண்டலங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இன்று (நவ. 1) காலையில் சென்னை அடையாறுகாந்தி நகரில் உள்ள பாட்ரிஷியன் காலேஜ் ஆஃப்ஆர்ட் அண்ட் சயின்ஸ் வளாகத்தில் நடைபெற உள்ள விநாடி-வினா போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்கள் அரங்குக்கு காலை 8 மணிக்கு நேரடியாக வந்து `ஸ்பாட் பதிவு (Spot Registration)' செய்து, போட்டியில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 9940268686 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

6 months ago

வர்த்தக உலகம்

6 months ago

மேலும்