ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் உடன் இணைந்து - ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘சீர்மிகு பொறியாளர் விருது - 2023’: நவ.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: கட்டுமானத்திலும் கட்டமைப்பிலும் சிறப்பான முறையில் தனித்துவத்துடன் செயலாற்றி வரும் பொறியாளர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சீர்மிகு பொறியாளர்-2023’ விருதுகளை வழங்கவுள்ளது.

இந்நிகழ்வை ரினாகான் ஏ.ஏ.சி ப்ளாக்ஸ், லெட்சுமி செராமிக்ஸ், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து வழங்குகின்றன.

5 பிரிவுகளின்கீழ் விருதுகள்

1. புதுமை: புதுமையான நுட்பங்களைப் பயன்படுத்தி சிறந்த கட்டமைப்பு, நெடுஞ்சாலை, பாலம், எஃகு கட்டமைப்பு போன்றவற்றை நிர்மாணிப்பதில் சிறந்து விளங்குதல்.

2. தொழில்நுட்ப தலையீடு: சிறந்த கான்கிரீட், கட்டுமானம், புதுமையான முறையில் வீடுகளை உயர்த்துதல், பொருட்கள் மற்றும் அமைப்புகளின் பயன்பாட்டைக் கொண்டிருத்தல்.

3. சுற்றுச்சூழலுக்கு உகந்தது: சிறந்தபழுதுபார்ப்பு மற்றும் கட்டமைப்புகளின்மறுசீரமைப்பு, நிலையான அல்லது பசுமைதொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்களைப்பயன்படுத்துதல்.

4. தொழில்முனைவு: கட்டுமானத் துறையில் தொடக்க தொழில்முனைவோராகவும், சிறந்த இளம் பொறியாளராகவும் இருத்தல்.

5. சிறந்த ஆய்வுக் கட்டுரை: சிவில் / ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் துறையில் சிறந்தஆராய்ச்சி முயற்சிகளை மேற்கொள்ளுதல். ஆகிய 5 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளன. அனைத்துப் பிரிவுகளிலும் வழங்கப்படும் விருதுகளுக்கு பாதுகாப்பு என்பது முக்கிய அம்சமாக கருதப்படும்.

இவ்விருது நிறுவனத்துக்கானது அல்ல. குறிப்பிட்ட திட்டத்துக்குத் தலைமை வகித்த தனிநபருக்கானது. விருதுக்குத் தன்னைத் தகுதியானவர் என்று கருதும் நபரோ அல்லது அவரை அறிந்தவர்களோ அல்லது அவர் சார்ந்திருக்கும் நிறுவனங்களோ கூட பரிந்துரை செய்யலாம்.

இத்துறையின் முன்னோடிகளான அண்ணா பல்கலைக்கழகத்தின் சிவில் இன்ஜினீயரிங் துறை மேனாள் பேராசிரியர், தலைவர் ஏ.ஆர்.சாந்தகுமார், சென்னை சிஎஸ்ஐஆர் இயக்குநர் என்.ஆனந்தவல்லி,அண்ணா பல்கலைக்கழகத்தின் பூகம்பம் மற்றும் மண் கட்டமைப்பு பிரிவு தலைவர், பேராசிரியர் கே.பி.ஜெயா, சென்னை ஐடிபிஎல், எல்&டி-யின் சாலைகள் மற்றும் பாலங்கள் தலைமை வடிவமைப்பாளர் ரவீந்தர சுப்பையா ஆகியோர் நடுவர் களாக இருந்து சிறந்த பொறியாளர்களைத் தேர்வுசெய்ய உள்ளனர்.

விண்ணப்பிக்க: https://connect1.hindutamil.in/Engineers-Award-2023

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE